பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 35

படி. விர கு - உபாயம்; பலவகை உபாயங்களால் பண்ணப் பட்ட பண்டங்கள்; ஆகுபெயர். இரீஇ - இருக்கச் செய்து.) - - -

அந்த உணவுகளே உண்ட மகிழ்ச்சியாலே, பண்கள் கன்கு அமைந்த சிறிய யாழை ஒளி பொருந்திய நெற்றியை யுடைய விறலியர்கள் மார்ச்சனை அமைந்த முழவினது தாளத்துக்கு ஏற்ப ஆடினர்கள். அவ்வாறு மகிழ்ச்சியை யுடைய கள் ளே உண்பதிலே பல கா8ளப் போக்கிைேம்.

மண்அமை முழவின் பண்.அமை சீறியாழ் ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க.

(மார்ச்சனே அமைந்த முழவினது தாளத்திற்கு ஏற்ப பண் அமைந்த சிறிய யாழை ஒளியையுடைய நெற்றியைப் பெற்ற விறலியர் ஆட. -

மண் - வலந்திரையில் மிருதங்கத்தில் பூசிய மண். முழவு. மத்தளம். சீறியாழ் - சிறிய யாழ், சிறு யாழ் என்பன புணர்ச்சியில் சீறியாழ் ஆயின; இகரம், குற்றிய லிகரம். ஒண்ணுதல் அவர்களுடைய மகிழ்ச்சியைப் புலப் படுத்தியது. பாணி - தாளம்; இங்கே தாளத்திற் கேற்ற பால. துாங்க ஆட.) - -

இவ்வாறு மகிழ்ச்சியைத் தரும் கள்ளை உண்டு உண்டு பல நாளைப் போக்கினுேம்.

மகிழ்பதம் பல்நாள் கழிப்பி.

(மகிழ்ச்சியையுடைய கள்ளை உண்ணுவதிலே பலநாள் போக்கி, - - -

பதம் உணவு. இங்கே கள். அடிக்கடி கள்ளை உண்டதனால் அதனைச் சொன்னன். கழிப்பி-போக்கி.