பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

கொல்ல நிலத்தை உழுத கொழுவைப் போல் எங்கள் பற்கள் பகலும் இரவும் ஊனேத் தின்று கூர்மை மழுங்கி.

கொல்ல . கொல்லை நிலம். கொழு . கலப்பையின் மு:ன. ஏய்ப்ப . ஒப்பு. எல்லே பகல்)

சற்றே இளைப்பாறவுழ் நேரம் இன்றி உண்டோம். அதஞல் அந்தி உணவுகள் தெவிட்டிவிட்டன.

உயிர்ப்புஇடம் பெரு.அது ஊன்முனிந்து.

இளைப்பாற நேரம் பெருமல், நிரம்ப ஊசினத் தின்று விட்டமையால் அதனே வெறுத்து. .

உயிர்ப்பு - இளைப்பாறுதல்; மூச்சுவிடக் கூட நேரம் இல்லாமல் எனலும் ஆம். மூக்குமுட்டச் சாப்பிட்டான்' என்ற வழக்கு இங்கே கினைப்பதற்குரியது. இடம் நேரம். முனிந்து . இது போதும் என்று மேலும் உண்ணுவதை விரும்பாமல் வெறுத்து,

இப்படி இருப்பது எங்களுக்கு அலுத்துப் போயிற்று. ஆகவே, ஒரு நாள் அவனிட்ம், குற்றத்தைச் செய்து எழுந்த பகைவரை வென்று திறை கொள்ளும் வகையெல் லாம் முற்றச் செய்த செல்வா' என்று விளித்துக் கூறத் தொடங்கிளுேம். - . .

- ஒருநாள் செயிர்த்து எழு தெவ்வர் திறைதுறை போகிய செல்வ!

. (ஒரு நாள் குற்றத்தைச் செய்து எழுந்த பகைவர்கள் தோல்வியுற்றுத் தந்த திறைகளின் வகைகளெல்லாம். முற்றப் பெற்ற செல்வா! -

செயிர்த்து . கோபித்து எனலும் ஆம், தெவ்வர்.

பகைவர். திறைதுறை. அவர்கள் தரும் திறைகளின் வகைகள். போகிய முற்றப் பெற்ற.1