பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பொருகர் ஆற்றுப்படை விளக்கம்

நாள் கிளந்தனமாக, அகறிரோ எனச் சொல்லித் தரத்தர யானும் தவம் செய் மாக்கள் அதன் பலம் எய்திய அளவை மான, வேண்டுவ முகந்து கொண்டு, அரசவை இருந்த தோற்றம் போல இன்மை திர வந்தனென் என்று விை முடிவு கொள்க.

கரிகாலன் பெருமை

அவன் பகைவரிடத்தில் சிற்றம் கொள்பவன். முருக னது சிற்றம் போல அது இருக்கும். பகைவர்கள் அஞ்சு வதற்குரிய தலைவன் அவன்.

முருகற் சீற்றத்து உருகெழு குருசில்.

முருகனது கோபம் போலும் சீற்றத்தையுடைய அஞ்சுதல் பொருந்திய தலைவன்.

சீற்றம் - கோபம். உரு - அஞ்சுதல் . குருசில்தலைவன்.) . . . . . . . - .

அவன் தன் தாய் வயிற்றில் இருக்கும்போதே, தன்

தந்தை இறந்து போனமையின் அரசுரிமையைப் பெற்ருன்.

தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி. (காயினுடைய வயிற்றிலே இருந்தபோதே அரச உரிமையைப் பெற்று.

தாயம்-அரச உரிமை. தான் பிறக்கின்ற காலத்துப் பிற வாதே நல்ல முகூர்த்தம் வருமளவும் தாயினுடைய வயிற்றிலே இருந்து பிறக்கையினலே, அரசவுரிமையைப் பெற்றுப் பிறந்து என்ருர்’ என்று நச்சினர்க்கினியர் எழுது வர். கோச்செங்கட் சோழன் பிறக்கின்ற காலத்தில் பிற வாமல் நல்ல முகூர்த்தம் வரும் அளவும் தாயினுடைய