- சங்கநூலாகிய பத்துப்பாட்டில் இரண்டர்வதாக இருப் பது பொருகர் ஆற்றுப்படை. பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படைகள் உள்ளன. கரிகால் பெருவளத்தானிடம் பரிசு பெற்ற பொருநன் ஒருவன், எதிரே வந்த, வறுமையை உடைய மற்ருெரு பொருகனைப் பார்த்து, யேம் என்னப் போலக் கரிகால்வளவனே அடைந்தால் பரிசுகளைப் பெற்று வரலாம்' என்று வழிப்படுத்தியது. ஆற்றுப்படை என்ப தற்கு வழிப்படுத்தல் என்பது பொருள். ஆற்றுப்படையின் இலக்கணத்தைத்தொல்காப்பியத்தில் காணலாம்.
பொருநர் ஏர்க்களம் பாடுவோ, போர்க்களம் பாடு வோர், பரணி பாடுவோர் என்று பல வகையாக உள்ள வர்கள். இந்தப் பாடலில் வருபவன் தடாரி என்னும் பறையைக் கொட்டுபவன். தடாரி என்பது கஞ்சிரா, பறை என்பவற்றைப் போல ஒரு பக்கம் மாத்திரம் அடிப்ப்ன வாக உள்ள ஓர். தாள வாத்தியம். இந்தப் பொருகன் தன்னுடைய மனைவியாகிய விறலியுடன் தனக்குப் பரிசில் வழங்குபவரைத் தேடிச் செல்பவன்.
இந்த ஆற்றுப்படையில் யாழின் இயல்பும், விறலியின் கிலேயும், எதிர் வருபவன் கூற்றும், தன் கிலே கூறுதலும், கரிகாலன் செய்த உபசாரங்களும், அவன் வழங்கிய கொடையும், அவனுடைய பெருமையும், அவனுடைய செயலும், அவன் வழங்கும் பரிசிலப் பற்றிய செய்தியும், சோழநாட்டு வளமும், காவிரியாற்றின் பெருமையும்