பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருகர் ஆற்றுப்படை விளக்கம் 43.

வயிற்றிலே இருந்து பிறந்தான் என்றும், அக்காரணத்தால் அவன் சிவந்த கண்ணே உடையவனனன் என்றும் கூறுவர்.

அவனுடைய பெருமையை அறியாமல் அவனே எதிர்க் துத் தோல்வியுற்றுப் பிறகு அவனுடைய வலிமையை அறிந்து அவன் ஏவின தொழிலைச் செய்தார்கள்.

எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,

|அவன் வலிமையை அறியாத பகைவர்கள் அவனிடம்

தோல்வியுற்று அவன் இட்ட ஏவலின்படி கேட்டு கடக்க.

எய்யா - அறியாத, தெவ்வர்- பகைவர்.

அவனுக்கு ஏவல் செய்யாமல், நாம் பணிய மாட்டோம் என்று இருந்த பகைவர் தேசத்தில் உள்ளார். இவன் நம்மை என்ன செய்து விடுவானே' என்று மனக்கவலை பெருக இருந்தார்கள். . . . - - - -

செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப.

|ஏவல் செய்யாத பகைவர் நாடுகளில் உள்ளோர் மனக் கவலை பெருக. - -

செய்யார் - ஏவல் செய்யாதவர். தேனம் காடுகள். தெரு மரல் - மனம் சுழன்று மறுகுதல். கலிப்ப - பெருக! மிக்க வெம்மையையுடைய சூரியனுகிய செல்வன் கடலின் மீது பரலேச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பிப் பின்னர் வானத்திலே சென்ருற் போல அவன் தோற். றினன். - -

பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி - வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்கு.