பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 6 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

பக்கத்து ஒலையை அடையாளமாக அணிந்தவன் சேரன். கரிய கொம்பினை உடைய வேம்பினுடைய ரம்ப்த்தின் வாயைப் போன்ற விளிம்பையுடைய அழகிய தளிராற் செய்த மாலையை அணிந்தவன் பாண்டியன்.

மற்ற மாலைகளிலெல்லாம் சிறந்தனவாக எண்ணி அவற்றைத் தம்முடைய கிமிர்ந்த பெரிய தலைகளில் மேலாக விளங்கும்படி அணிந்த இரண்டு பெரிய வேந்தர் களாகிய சேரனும் பாண்டியனும் ஒருங்கே எதிர்த்த ஒரு களத்தில் அழியும்படி செய்தவன் கரிகாலன்.

இரும்பனம் போங்தைத் தோடும் கருஞ்சினை

அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலந்த

இருபெரு வேந்தரும் ஒருகளத்து அவிய.

|கரிய பனைமரத்தினது குருத் தோலையையும் கரிய கிளே களையுடைய ரம்பத்தின் வாயைப் போன்ற விளிம்பை யுடைய வேப்ப மரத்தின் அழகிய தளிராலாகிய மாலையை யும் சிமிர்ந்த பெரிய தம் தலையில் மேலாகத் தோன்றும்படி அணிந்த சேர பாண்டியர்களாகிய இரண்டு பெரிய மன்னர் களும் ஒரு போர்க் களத்தில் அழிந்து போக.

இரு கரிய இது மரத்துக்குஅடை. போர்தை - பனே. தோடு . மடல், சினே - கிளே. அரம் . ரம்பம். குழை . தளிர், தெரியல் -மாலை. ஒங்கு - நிமிர்ந்த மேம்பட - தலையில் அணிந்தமையால் அவை மேம்பட்டன. மி அலந்த. அணிந்த, அவிய - அழிய) -

வெண்ணி என்ற ஊரில் இந்தப் போர் நடைபெற்றது.

அவ்விடம் இப்போது கோயிலுண்ணி என வழங்குகிறது. அந்தப் போரில் கரிகாலன் பகைவரைத் தாக்கினன். பயங்கரமான வலிய முயற்சியை உடையவன் அவன்; கண்ணுக்கு அழகு கிரம்பிய ஆத்தி மாலையை அணிந்த கரிகால் வளவன்.