பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருகர் ஆற்றுப்படை விளக்கம் 47

வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள் கண்ஆர் கண்ணிக் கரிகால் வளவன்.

(வெண்ணி என்னும் இடத்தில் அமைந்த போர்க்களத் தில் பகைவர்களே எதிர்த்து வென்றவனும், பகைவர்கள் அஞ்சுவதற்குரிய வலிய முயற்சியையுடையவனும், கண் நிறைந்த அழகையுடைய ஆத்தி மாலையை அடையாள மாலையாக உடையவனுமாகிய கரிகால் வளவன்.

தாக்கிய - பொருது வென்ற, வெருவரு . அச்சம் உண்டாதற்குக் காரணமான நோன்தாள் - வலிய முயற்சி. கண்ஆர் - கண்ணுக்கு அழகு கிரம்பிய, கண்ணி. அடையாள மாலே இது கிலேயிற் சூடுவது.) .

தாயம் எய்திப் பிறந்து மிகுவலி செருக்கித் தெல்வர் ஏவல் கேட்பச் செய்யார் தோம் தெருமரல் கலிப்ப, நாடு செகிற் கொண்டு, காள்தோறும் வளர்த்தல் காரணமாக, குருளே களிறட்டாங்கு, இரு பெரு வேந்தரும் அவியத் தாக்கிய கரிகால் வளவன் என்று கூட்டிப் பொருள் கொள்க. -

கரிகாலன் வழங்கும் பரிசில்

அவனிடம் சென்று அவன் திருவடியைக் குறுகி அதனைத் தொழுது அவன் முன்னே நீங்கள் விற்க வேண்டும். அப்போது அவனுடைய பார்வை உங்கள் மேற் படும். சிறிதும் குற்றம் இல்லாத பார்வையால் தன் கன்றுக் குப் பால்தர வேண்டுமென்று கன்றை ஈன்ற பசுவைப் போல, உங்கள் தோற்றத்தைக் கண்டு அதல்ை உங்கள் வறுமையை உணர்ந்து கொண்டு, அதைப் போக்க வேண் டும் என்ற எண்ணத்தோடு பார்ப்பான், -

தாள்கிழல் மருங்கில் அணுகுபு குறுகித் தொழுதுமுன் நிற்குவிற். ஆயின், பழுதின்று ஈற்ரு விருப்பிற் போற்றுபு நோக்கி.