பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

- தருவதாகிய செயலில் நிலைபெற்று கிற்பதினின்றும்

ஒழிவில்லாதவன். - -

தரவுஇடை - தருதலாகிய சமயத்தில். தரவிடத்துத் தாழ்த்தல் இலன் என்றுமாம் என்று கூறுவர் நச்சிர்ைக் கினியர். ஒவிலன் - இடையீடில்லாதவன்; தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருப்பவன்.1 -

நீங்கள் பெற்றவை அனைத்தையுப் எடுத்துக் கொண்டு வர இயலாது. ஆதலின் நீங்கள் பெற்றவற்றில் உங்களால் எடுத்துச் செல்ல முடியாதவற்றை உங்களைப் போல வந்த வேறு வேறு பேர்களுக்கு கிரம்பக் கொடுக்க வேண்டி யிருக்கும்.

- வரவிடைப்

பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி.

(நீங்கள் சென்றமையால் பெற்றவற்றில் மிகுதி யானவற்றை உங்களைப் போல வந்த வேறு வேறு பேர் களுக்கு நிரம்பக் கொடுத்து.

வள்ளலைச் சார்ந்தமையால் அவர்களும் வள்ளலைப் போலப் பிறருக்கும் வழங்கும் தன்மையைப் பெறு: வார்கள்.) -

பல நாள் அங்கே தங்கியிருந்தமையால் உங்களுக்கு வீட்டு நினைவு வரும். இந்த வளங்களே யெல்லாம் நம் மனைவிக்கும் சுற்றத்தார்க்கும் காட்டிப் பெருமிதம் அடைய வேண்டும் என்ற எண்ணம் எழும். -

அதனுல் அவனிடத்தினின்றும் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வருவீர்க்ள். அவனுடைய போருள், நம்மை விட்டாற் போதும் என்று தெவிட்டிப்