பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 59.

இதில் திணை மயக்கம் வந்தது. மருத நிலத்தில் இருக் கும் காக்கை நெய்தல் நிலத்தில் உள்ள ஆமைக் குட்டியைத் தின்னும் என்ருர். தவழ்பவற்றைப் பார்ப்பு என்பது இலக்கணம். (தொல். மரபு. 5.) -

மருத கிலத்தில் உள்ள உழவர்களின் சிறு பெண்கள் விளையாடுகிறர்கள். நெய்தல் நிலத்தில் உள்ள மணற் குன்றிலே வண்டல் இழைத்து விளேயாடுகிருர்கள்.

இளையோர் வண்டல் அயரவும்.

(இளைய உழவர் மகளிர் நெய்தல் கிலத்தின் மணற் குன்றிலே வண்டல் இழைத்து விளையாடவும்.

இளயோர் இழய உழவர் மகளிர் வண்டல்-விள யாடும் இடம். அயர - விளையாட.)

கரிகாலனுடைய நாட்டில் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்வதில்லை. எல்லோரும் சமாதானமாக வாழ்ந்தார்கள். அரசனது அவையிலே ஒன்ருகக் கலந்து சென்று புகுவார் கள். அவர்களிடம இருந்த மாறுபாடெல்லாம் போயிருக் கும். அவ்வாறு கரிகாலன் ஆட்சி புரிந்தான்.

முதியோர் அவைபுகு பொழுதில்தம் பகைமுரண் செலவும். (பல காலமாகப் பகையில் முதிர்ந்தவர்கள் கரிகால னுடைய அரசவையிலே புகும்போது தம்முடைய பகை மைக்குக் காரணம்ான வேறுபாடுகள் எல்லாம் போகவும்.

முதியோர் - பகையில் முதியவர்கள். அவை - அரசவை. பகைமுரண் - பகையால் வந்த மன வேறுபாடு.)

கரிகாலன் தம் முன் வழக்கிட்டவர்களின் வழக்கைத் - தீர்ப்பதில் வல்லவன். தம்முள் மறுதலே ஆயினர் இருவர்