பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 . பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

வறண்ட இடத்திற் படரும் அடும்பங் கொடியையும் உயர்ந்த பகன்றையையும் தளிர்களேயுடைய புன்கமரத்தை யும் கொண்டதும், தாழ்ந்ததுமாகிய அந்தச் சோலேயில், அரும்புகளையுடைய ஞாழலோடு பிற மரங்கள் கூட்டமாக வளர்ந்த அவ்விடத்தில். - -

வறள் - வறட்சி. இவர் - படரும். தாழ் - தங்குதலு மாம். கனே - அரும்பு. ஞாழல் ஒரு வகைக் கொன்றை. குழி இய - கூட்டமாக வளர்க்க.)

அந்த இடத்தில் சில காலம் தங்கிச் சலிப்பு ஏற்பட் டால் அங்கிருந்து நீங்கி மாறுகின்றன.

முல்லை நிலத்தில் 5676 என்ற் అతడి படர்ந்திருக் கிறது. அந்தத் தளவையும் பரந்த தோனறியையும், அலர் கின்ற முல்லையினையும், பூ உகுகின்ற தேற்ருவையும், பொன் போன்ற பூவினையுடைய கொன்றையினையும் நீல மணி போன்ற பூவினயுடைய காயாவினையும் உடைய நல்ல காட்டில் உறை சில காலம் உறைவர். பிறகு அது சலித்துவிட்டால் மருத கிலத்துக்குச் செல்வார்கள். அங்குள்ள காட்சிகளையும் அங்குள்ளார் ஒழுக்கத்தையும் புகழ்வார்கள். பிறகு அங்கும் சலிப்பு ஏற்படும்.

- அவண்முனையின் அகன்றுமாறி அவிழ்தளவின் அகன்தோன்றி ங்குமுல்லை உகுதேறுவீப பொற்கொன்றை மணிக்காயா கற்புறவின் நடைமுனையின். அவ்விடத்தில் சலிப்பு உண்டானல் அவ்விடத்தை விட்டு நீங்கி மாறி, இதழ் அவிழ்ந்ததளவும், விரிந்த

தோன்றியும், அலர்ந்த முல்லையும், உகுகின்ற தேற்ரு மரத்தின் பூவும், பொன்கிறம் பெற்ற கொன்றை மலரும்,