பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 63

நீலமணியைப் போன்ற காயாவும் உள்ள நல்ல முல்லை நிலத்தின் வாழ்வது சலித்துப் போனல்,

அவண் - அவ்விடத் கில். முனேயின் - சலிப்பு ஏற்பட் டால், அவிழ் - இதழ் விரிந்த, தளவு - செம்முல்லை. நகு. ஒளி பெற்ற, உகு - உதிரும். தேறுவி - தேற்ரும்பூ. மணி - நீலமணி. புறவு - முல்லைநிலம். நடை - ஒழுக்கம். முனேயின் - சலிப்பு ஏற்பட்டால்.)

இனி, சுரு:மீன்கள் உலாவுகின்ற விரிந்த கடலில் உள்ள இரு மீன்களை உண்ட கூட்டமாகிய காரைகள், பூக்கள் ரம்பிய புன்னே மரத்தின் கிளையில் கங்கினல், ஓங்கி வீசும் கடல் அலையின் ஒசைக்குப் பயந்து இனிய பனை மரத்தின் மடல்களில் தங்கவும். -

சுறவழங்கும் இரும்பெனவத்து

இறவு அருந்திய இனங்ாரை

பூம்புன்னச் சினச்சேப்பின்

ஓங்குதிரை ஒலிவெரீஇத்

தீம்பெண்ண மடற்சேப்பவும்.

(சுரு மீன்கள் உலாவும் விரிந்த கடலில் உள்ள இரு

மீன்களே உண்ட கூட்டமாகிய நாரைகள், பூக்களை உடைய புன்னை மரத்தின் கிளையில் தங்கில்ை, உயர்ந்து வீசும் கடலலைகளின் ஒசைக்குப் பயந்து இனிய பனே மரத்தின் மடலிலே தங்கவும். - *... +

பெளவம் - கடல், இனம் - கூட்டம், சின - கிகள. சேப்பின் . தங்கினல். வெரீஇ . அஞ்சி. திம் - இனிமை; நுங்கை கினைந்து சொன்னபடி, சேப்ப - தங்க.)

குலகுலையாகக் காய்த்த தென்ன மரங்களின் காப்க். குலைகளையும், வாழையையும், கொழுவிய காந்தளேயும்,