பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

மலர்ந்த சுரபுன்னேயையும், துடி ஓசை போன்ற ஓசையை உடைய பேராந்தையினையும் உடைய குடியிருப்பை உடைய பாக்கத்தில் வாழும் மாதவர் அவ்விடத்தில் சலிப்பு ஏற்பட்டால் குறிஞ்சி கிலத்துக்குச் சென்று அவ், விடத்தைப் புகழ்கிருர்கள். -

கோள்தெங்கின் குலவாழைக் கொழுங்காந்தள் மலர்நாகத்துத் துடிக்குடிஞைப் குடிப்பாக்கத்து.

(காய்களே யுடைய தென்னைமரமும் குலேகளேயுடைய வாழையும் கொழுவிய காந்தளும், மலர்ந்த சுரபுன்னேயும், உடுக்கையின் ஒலி போன்ற பேராந்தையையும் உடைய குறிஞ்சி நிலத்துக்கு (சென்று.) -

கோள் - காய். நாகம் சுரபுன்னே. துடி - உடுக்கை. குடிஞை - பேராக்தை. பாக்கம் - குறிஞ்சி நிலத்து ஊர்.)

குறிஞ்சி நிலத்தில் வண்டுகள் யாழைப் போல முரல் கின்றன. அந்தப் பாட்டுக்கு எற்பத் தன் கலாவத்தை, விரித்த இளைய மயில்கள் நிலவு போன்ற நிறமுடைய மணல் மேட்டில் பலவாகப் பெயர்ந்து செல்கின்றன.

யாழ்வண்டின் கொளக்கு ஏற்பக் கலவம்விரித்த மடமஞ்ஞை நிலவெக்கர்ப் பலபெயர.

(யாழ்போல முரலும் வண்டின் பாட்டுக்கு ஏற்றபடி தன் தோகையை விரித்த இளைய மயில் கிலவு போன்ற நிறத்தையுடைய மணல் மேட்டில் பலவாகச் செல்ல.

கொளே - பாட்டு. கலவம் - தோகை. எக்கர் - மேடு. கிலவுஎ க்கர் . நிலவு படர்ந்த மேடு எனலும் ஆம். பல பெயர - பலமாகச் செல்ல.)