பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 69
என்று நடுங்கும்படி, பல வகையாகச் சிறப்புப் பெற்ற விளக்கத்தைத் தரும் நல்ல ப ைகிரணங்களைப் பரப்புகிறது. கதிரவன். எங்கும் ஒரே வெப்பம். பசுமைக்கே இடம் இல்லை. -
கஞ்சாச் செடிகள் கருகுகின்றன. மரங்களின் கொம் புகள் தீப்பற்றி எரிகின்றன. பெருமையையுடைய மலே களிலிருந்த வீழும் அருவிகள் எல்லாம் வறண்டு போயின. அன்றியும் கூட்டமாகிய மேகங்கள் கடலிலுள்ள தண்ணின்ர முகக்க மறந்துவிட்டன. இவ்வாறு மிகப்பெரிய பஞ்சம் உண்டாகி நற்குணம் இல்லாத பொல்லாத காலத் திலும் காவிரி தன் வளம் குன்றுவதில் . -
மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண் எல்லைதருகன் பல்கதிர் பரப்பிக் குல்ல கரியவும் கோடெரி கைப்பவும் அருவிமாமலை கிழத்தவும் மற்றக் கருவி வானம் கடல்கோள் மறப்பவும் பெருவறன் ஆகிய பண்பில் காலையும்.
(பகை மன்னர்களெல்லாம் நடுங்கும்படியாகத் தோன்றி, பல வகையாக மாட்சிமைப்பட்ட விளக்கம் தரும் நல்ல பல கிரணங்களைப் பரப்பி, கஞ்சாச் செடி கரீயவும், மரங்களின கிளைகளில் நெருப்புப் பற்றவும், பெரிய மலைகளில் அருவிகள் இல்லையாகவும், மற்றுள்ள தொகுதியாகிய மேகங்கள் கடலில் நீரை முகப்பதை மறக்க வும், பெரிய பஞ்சமாகிய நலமற்ற காலங்களிலும்.
மன்னர் - பகைமன்னர். பன்மாண் -பலவாக மாட்சி மைப்பட்ட எல்லே - வெளிச்சம். நன் என்றது மற்றக் காலத்து கிலேயைச் சொன்னபடி. கன்பலகதர், இப்போது