பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

இவ்வாறு ஒவ்வொரு நாளும் அறுத்த நெற்கதிர்களைக் கடாவிட்டு அடித்து நெல்லத் திரட்டிக் குவிக்கிருர்கள்.

காள்தொறும் குன்றுஎனக் குவைஇயகுன்றக் குப்பை. - (ஒவ்வொரு நாளும் குன்றைப் போலக் குவித்த குன்ருத நெற்குவியல். குவை இய குவிக்கப் பெற்ற. குப்பை - குவியல்.)

கெல் மூட்டைகளைக் குதிர்களில் சேமித்து வைக்கிருர் கள். நெருங்க அமைத்த குதிரில் வெற்றிடம் இல்லையாகும் படி கிடக்கும்படி அடுக்குகிருர்கள். . . . . .

கடுந்தெற்று மூடையின் இடம்கெடக் கிடக்கும்.

(நெருங்க அமைத்த குதிரில் வெற்றிடம் இல்லையாகும் படி கிடத்தற்குக் காரணமான. . . .

தெற்றுமூடை - நெருங்கிய மூட்டை.)

கடுந்தெற்று முடைகோட்டையுமாம். என்று எழுது வர் நச்சினர்க்கினியர். - - +

இவ்வாறு விளந்த கெல்லின் அளவு எப்படி இருக் "கிறது?

செந்நெல்லின் விளைவு ஒரு வேலிக்கு ஆயிரக்கலமாக இருக்கிறது. அவ்வாறு உண்டாகும் வளம் காவிரியால் ஆகியது. அந்தக் காவிரியால் புரக்கப்படும் நாட்டுக்கு உரியவன் கரிகால்வளவன். - ...' - சாலி நெல்லின் சிறைகொள் வேலி , ஆயிரம் விளையுட்டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே