பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 73

(நெல்லின் வரம்புகட்டின வேலி கிலம் ஆயிரம் கலம் விளைவை உடையதாகச் செய்து காவிரி பாதுகாக்கும் காடு தனக்கே உரிய தன்மையை உடைய கரிகால் வளவன்.)

பொருக, கோடியர் கொண்டதறிந, புகழ் மேம்படுக, எழின் கிழவ, காடுறை கடவுட் கடன் கழிப்பிய பின்றை, நெறி திரிந்து ஏராஅது, ஆற்றெதிர்ப்படுதலும் கோற்ற தன் பயனே, போற்றிக் கேண்மதி, கின் இரும் பேரொக்க லொடு பசி ஒராஅல் வேண்டின், டிேன்று எழுமதி: யானும் இன்மை தீர வந்தனென்; உருகெழு குருசிலாகிய உருவப் பஃறர் இளையோன் சிறுவன், கரிகால்வளவன், நாடுகிமு வோன், குருசில்; அன்னேன் தாள் நிழல் மருங்கிற் குறுகி, மன்னர் கடுங்கத் தோன்றி, வாழி எனத் தொழுது முன் கிற்குiராயின், காட்டொடு வேழம் தரவிடைத் தங்கலோ, விலன் எனக்கூட்டி வினைமுடிவு செய்க" என்பது கச்சிர்ைக் கினியர் காட்டும் வினைமுடிவு. -

பொருநராற்றுப்படை உரைகடை

இடையருத செல்வ வருவாயினே உடைய அகன்ற இடத்தை உடைய பெரிய ஊர்களிடத்து, விழாக்கழிந்த பின்ளிைல் அங்கே பெறுகின்ற சோற்றை விரும்பாமல், விழாக் கொண்டாடும் வேற்றிடத்தைக் கருதிய உபாயத்தை அறிந்த பொருக, மான்குளம்பு அழுத்திய இடத்தை யொத்த இரண்டு பக்கத்திலும் தாழ்ந்து நடுவில் உயர்ந்த குடத்தினேயும், விளக்கினது எரிகின்ற நிறத்தையுடைய விசித்துப் போர்த்த தோல், மிக அறியப்படாத இளைய கருப்பத்தைஉடைய சிவந்த நிறத்தை பெற்றவளுடைய அழகினையுடைய வயிற்றின் மெல்லிதாகிய மயிர் ஒழுங்கு படக் கிடந்த தோற்றம் போல, இரண்டு தலையும் கூட்டித் தைத்த மரத்தைத் பொதிதலும் போர்வையினேயும், வளே யிலே வாழ்கின்ற கண்டின் கண்ணேக் கண்டது போன்ற