பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 75

தினேயும், அசைகின்ற மூங்கில் போலும் பெருத்தலே யுடைய தோளை யும், மெல்லிய மயிரையுடைய முன் கையை யும், நெடிய மலையின் உச்சியில் வளர்ந்த காந்தளேப் போன்ற மெல்லிதாகிய் விரலையும், கிளியினது வாயை ஒத்த ஒளிவிடுகின்ற பெருமையை உடைய நகத்தையும், பிறருக்கு வருத்தமெனத் தோன்றின அழகுத் தேமல் அணிந்த மார்பிடத்து ஈர்க்கும் நடுவே போகாத எழுச் சியையுடைய இளைய அழகிய முலையையும், நீரில் பெயரும் சுழிபோல உத்தம இலக்கண்ங்கள் நிறைந்த கொப்பூழை யும், உண்டென்று பிறர் உண்ரப்படாத வருந்தும் இடை யினையும், பல வண்டுகளின் இருப்பை யொத்த பல மணி கோத்த படங்களையுடைய மேகலேயை அணிந்த அல்குலே யும், பெரிய பிடியினுடைய பெருமையை உடைய கை போல ஒழுக வந்து மெல்லிதாகத் தம்மில் நெருங்கி ஒன்றித் திரண்ட துடையையும், கணக்காலுக்கு இலக்கணம் என்பதற்குப் பொருங் தின மயிர் ஒழுங்குபட்ட ஏனே இலக் கணங்கள் திருந்தின கணக்காலுக்குப் பொருந்த, ஒடி இளேத்த நாயின் நாக்குப் போன்ற சிறிய தாளுக்குப் பொருந்தப் பெருமை தங்கியிருக்கும் அடியையும், சாதிலிங் கத்தை உருக்கின தன்மையை ஒத்த செய்ய நிலத்தே கடக் கையினலே, சுக்கான கல்லாகிய பகையாலே வருந்தின நோயோடே பொருந்தி, மரல் பழுத்தாற் போன்ற துளும்பு நீரையுடைய கொப்புளத்தோடு, என்ருகிய உச்சிக் கால மாகிய சந்தியிலே நடத்தலை நடுவிலே தவிர்தலாலே, பெடை மயில் அருகு நின்ற மயில் போலும் சாயலினையும் உடைய கல்விப் பெருமை தக்கிருக்கின்ற பாடினி பாடின. தாளத்திற்குப் பொருந்த, நாள் தோறும் யானே உலா' வரும் வழியை உடைய நாட்டில் தங்கி, இலஇல்லாத மராமரத்தின், வலையை மேலே கட்டில்ை ஒத்த மெல்லிய நிழலில், கொப்புளத்தால் வந்த வருத்தத்தைத் தாங்கி, தடாரியை வாசித்து காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்கு மனமகிழ்ச்சியாகச் செய்யும் முறைகளைச் செய்துவிட்ட பின்பு பெருமை பொருந்தின செல்வத்தையும் பெரிய