பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 7 9
யாத அரிசி விரல் என்னும்படி, நெடுகின ஒன்ருேடு ஒன்று சேராத சோற்றையும், பாலைப் பொரித்து அதனேடே கூட்டிய பொரிக் கறிகளையும் கழுத்திடத்தே வந்து நிரம் பும்படி விழுங்கின காலத்தே, அவனை விடாதே இனிதாக இருந்து, பகலும் இரவும் இறைச்சியைத் தின்று எம் முடைய பற்கள் கொல்ல நிலத்தில் உழுத கொழுவை ஒப்ப முனை மழுங்கி, இளைப்பாற இடம் பெருமல் இவ்வுணவு களே வெறுத்து, குற்றத்தைச் செய்து எழுந்த பகைவரைத் திறை கொள்ளும் கூறுபாடுகள் எல்லாம் முடியப் போன செல்வா, இனி மீண்டு எம்முடைய பழைய ஊருக்குச் செல்வேமென்று மெல்ல ஒருநாள் சொன்னேமாக, அது. கேட்டுக் கோபித்தான் போல எமக்கு வருத்தத்தைச் செய்த பார்வையுடனே, எம் கூட்டத்தை விட்டு விரைந்து
போகின் ஹீரோ?' எனச் சொல்லி, பிடியொடு புணர்ந்த களிறுகளைத் தம் அடிகள் துடியின் கண்ணே பொத்த
அசைந்த நடையினையுடைய கன்றுகளுடனே, கைக்
கொள்வாயாக’ என்று சொல்லி, பின்னும் தான் விரும்பி
யிருந்த ஊர்திகள், ஆடைகள், அணிகலங்கள் முதலிய
வற்றைத் தான் அறிந்த அளவாலே மேன்மேலே தர,
யானும் என்னுடைய குறைகளே யான் அறிந்த அளவாலே
வேண்டுவனவற்றை வாங்கிக் கொண்டு, வறுமை எக்கால
மும் இல்லையாகும்படி வந்தேன்.
முருகனது சீற்றம் போலும் கோபத்தையுடைய அஞ்சு தல் பொருந்திய தலைவனும், தாயுடைய வயிற்றிலே இருந்து அரச உரிமையைப் பெற்றுப் பிறந்தவனும், முன்பு தன் வலிமையை அறியாத பகைவர் பின்பு தன் வலிமை யினே அறிந்து ஏவின தொழிலச் செய்ய, ஏவல் செய்யாத பகைவர் தேசம் மனக்கவலை பெருக, வெம்மையை உடைய, எல்லாராலும் விரும்பப்படும் இளஞாயிறு கடலின் மீதே பகற் பொழுகைச் செய்யும் கிரணங்களைப் பரப்பிப் பின்னர் வானத்திலே மெல்லச் சென்ரு ற்போலே, தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி சுற்றுவனுடைய வலியைக் காட்டிலும்