பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.0 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

மிகுகின்ற வலியாலே கலித்து, இனயோர் நாட்டிலும் சிறந்த தன் காட்டைத் தோளிலே வைத்துக் கொண்டு நாள்தோறும் வளர்த்தல் காரணமாக ஆளிவாகிய கல்ல விலங்கினது வருத்துதலையுடைய குட்டி முலே உண்டலக் கைவிடாத இளைய பருவத்தில் விரைவில் முற்பட இரை யைக் கொள்வதற்குக் காரணமான வேட்டையிலே களிற் றைக் கொன்ருற் போல, கரிய பனங்குருத்தில் அலர்ந்த வலப்பக்கத்து ஓலையும், கரிய கொம்பினே உடைய, வேம் பினுடைய ரம்பத்தின் வாய் போலும் விளிம்பினே உடைய அழகிய தளிரால் செய்த மாலையும், கறிய மாலேகளில் மேலாதற்குக் காரணமான பெரிய தலையிலே ஏனேயோர் குடும் அடையாளப் பூக்களிற் சிறப்ப அவற்றைச் சூடிய சேரனும் பாண்டியனும் ஒரு களத்தே படும்படி, வெண்ணி என்கிற ஊரில் பொருத அச்சங் தோன்றுகின்ற வலிமையை உடைய முயற்சியையும் கண்ணுக்கு அழகு நிறைந்த ஆத்தி மாலையினையும் உடையவனுமாகிய கரிகாற் சோழனுடைய, அருளேத் தன்னிடத்திலே உடைய திருவடி களை அருகில் நின்று சேர்ந்து வணங்க, நும்முடைய வறுமை தோன்ற முன்னே சிற்பீராயின், ஈன்ற பசு தன் கன்றுக்குப் பால் சுரந்து கொடுக்க வேண்டும் என்னும் விருப்பம் போல, நும்மிடத்து கிற்கின்ற வறுமை இல்லே யாகுமபடி பேணிப் பார்த்து, நும்மிடத்துள்ள கலையைத் தான் கேட்பதற்கு முன்னே, விரைவில், கொட்டைப்பாசி யின் வேர்பேர்லே அழுக்கோடே குறைந்த தையலே உடைய துணிகளைப் போக்கி, தூயனவாகிய திரள முடிந்த முடிகளைக் கரையிலே உடைய பட்டாகிய உடைகளைத் தந்து, பெறுதற்கரிய பொற்கலத்தில் விரும்பினபடியே உண்பாய்ாக என்று சொல்லி, குங்குமப்பூ மணக்கின்ற, தனி கடுமையால் சிறிது அமையும் என்று கைகவித் தற்குக் காரணமான கள் தெளிவை மேன்மேலே வார்த்துத் தரத்தர், நாள்தோறும் கர்ள்தோறும் பருகி, நெருப்புக் கொழுந்து விட்டாற் போன்ற, ஒருவன் செய்த தன்றித் தனக்கு என இதழ் இல்லாத பொற்ருமரையை, கடை