பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

இயல்பையும் கூறுகிறது. பிறகு, நானும் வறுமையால் துன்புற்றவன்தான்; கரிகால் சோழனிடம் சென்று இந்தப் பரிசுகளையெல்லாம் பெற்றேன்' என்று சொல்கிருன். அப்பால் அவன். சென்ற பொழுது கரீகாற் பெருவளத் தான் அவனே எதிர்கொண்டு அழைத்து, அவனுடைய வறுமைக்குரிய சின்னங்களே யெல்லாம் அறவே நீக்கி, பல வகை உணவுகளைத் தருகிருன் பலநாள் அங்கே தங்கிய பொருகன் ஒருநாள், எங்கள் ஊருக்குப் போகிறேன்' என்று சொல்ல, வளவன் சற்றே சினந்த்வனைப் போலப் பார்த்து, யானே முதலிய பரிசுகளே வழங்குகிருன். 4 * : .

இந்தப் பகுதிக்குப் பின் கரிகாற் பெருவளவன் சிறப் புக் கூறப்படுகிறது. அவன் கருவில் இருக்கும்போதே அரசுரிமையைப் பெற்றதும், சேர பாண்டியர்களோடு பொருது அழித்ததும், அவனிடம் போனல் இன்னஇன்ன நலம் செய்வான் என்பதும் வருகின்றன. . . . . -

பிறகு சோழநாட்டில் நால்வகைத் திணைகள் இருப் பதும், ஒரு திணையில் உள்ளவர் வேறு திணைக்குச் சென்று அங்குள்ள இன்பங்களை நுகர்வதும் வருகின்றன. இறுதி யில் காவிரியின் பெருமையைக் கூறுகிருன் பொருகன்.

இவற்றை இனி முறையே பார்ப்போம்.

யாழின் இயல்பு

முதலில் எதிர்வரும் பொருகனப் பரிசு பெற்று வரும் பொருநன் விளிக்கிருன், பெரிய ஊர்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் சென்று தன் வாத்தி யத்தை வாசித்து உணவும் பரிசும் பெற்றவன் எதிர் வருபவன். என்றும் அருத புது வருவாயையும் அகன்ற இடத்தையும் உடைய பெரிய ஊர்களில் திருவிழா நடை பெற, அங்கே சென்று வாத்தியம் வாசித்துவிட்டு, வயிறு.