பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் ஆற்றுப்படை விளக்கம் 83

கொன்றையினையும் லேமணி போன்ற பூவினையுடைய காயாவினையும் உடைய நல்ல நாட்டில் உறைகின்ற ஒழுக் கத்தை வெறுக்கின், மருதநிலத்தே சென்று அவ்வொழுக் கத்தைப் புகழவும், சுருத்திரியும் கரிய கடலின் கண் இறவைத் தின்ற திரண்ட காரைகள் பூக்களை உடைய புன்னைக் கிளையிலே தங்கின், அதன் மேலே முரிகின்ற உயர்ந்த திரையினது ஆரவாரத்திற்கு அஞ்சி மருத கிலத் தில் இனிய பனையின் மடலிலே தங்கவும், குல்ே கொண்ட தென்னேயையும் குலையினையுடைய வாழையையும் கொழு விய காந்தளேயும் மலர்ந்த சுரபுன்னேயையும் துடி ஓசை போன்ற ஓசையை உடைய பேராந்தையினுடைய குடி யிருப்பை உடைய பாக்கத்தில் வாழும் மருதவர் அவ். விடத்தை வெறுப்பின் குறிஞ்சி கிலத்துக்குச் சென்று அவ் விடத்தைப் புகழவும், தேகிைய கெய்யோடே கிழங்கையும் விற்றவர்கள் மீன் நெய்யோடே நறவையும் கொண்டு போகவும், இனிய கரும்போடே அவ்லக் கூறுபடுத்தி விற்றவர்கள் மானினது தசையோடே. கள் அளயும் கொண்டு போகவும், குறவர் அங்கிலத்துப் பூக்களை வெறுக்கின் நெய்தலினது கறிய பூவாற் செய்த கண்ணி யைச் சூடவும், காட்டில் உள்ள கோழிகள் நெற்கதிரைத் தின்னவும், மருத நிலத்தின் மனையில் உள்ள கோழிகள் தினையைத் தின்னவும், மலையிடத்திற்குரிய மந்திகள் கழி யிலே மூழ்கவும், கழியில் திரியும் காரைகள் மலையிலே கிடக்கவும், குளிர்ந்த இடங்களே உடைய நான்கு தருகிய நாடுகள் திரண்டு, குற்றமின்றித் தருமத்தோடு கூடிய வழியை உலகம் அறிதற்குக் காரணமாகிய செங்கோ லாலும், தண்ணளி செய்தற்கு எடுத்த ஒரு குடையாலும், தனது ஆணையையே உலகம் கூறும்படியாகவும், முதியோர் முரண் செல்லும்படியாகவும், பெரிய நட்புடனே கெடுங் காலம் உலகை ஆண்ட வெல்கின்ற வேலையுடைய தலைவன்

யான் கூறிய அத்தன்மைகளே உடையோன்.

நீ வாழ்வாயாக!