பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

பகையரசர் நடுங்கும்புடி விளங்கி, பல்லுயிர்களும், மாட்சிமைப்படுவதற்குக் காரணமாகிய பகற் பொழுதைத் தரும் கதிரவன் தன் நிலையைவிட்டுப் பல கிரணங்களைப், பரப்புகையினலே, கஞ்சங்குல்லே தீயவும், மரங்களினு டைய கிளைகளை நெருப்புத் தின்னவும், பெருமையை உடைய மலை தன்னிடத்து அருவிகளே இல்லையாக்கவும், இவை ஒழிந்த தொகுதியையுடைய மேகம், கடலில் நீரை முகத்தலே மறக்கவும், பெரிய பஞ்சம் உண்டாகிய நற்குணம் இல்லாத காலத்திலும், நறைக் கொடியும் நரந்தப் புல்லும் அகிலும் சந்தனமும் ஆகிய சுமையைத் துறைதோறும் துற்ைதோறும் இளைப்பாறத் தள்ளிப் போய், நுரையைத் தலையிலே உடைய ஆரவாரத்தை உடைய நீர் குளத்திலும் மடுவிலும் புகுந்தோறும், நீராடும் மகளிர் விரைவில் முழுகிக் குடைந்து விளையாட, வளைந்து நின்று அரிவாளின் வாயாலே கெல்லே அறுத்து, குட்டை மலையாக அடுக்கி, காள்தோறும் கடாவிட்டு மேரு என்னும்படி குவித்த தொலையாக கெற்பொலி, நெருங்க அமைத்த குதிரில் வெற்றிடம் இல்லையாகும்படி கிடத்தற் குக் காரணமான, வரம்பு கட்டின வேலி நிலம் ஆயிரக்கல மாகிய செந்நெல்லின் விள்ைவை உடையதாகக் காவிரி பாது காக்கும் நாடு தனக்கே உரியதாகும் தன்மையை உடை யவன் கரிகால்வளவன். - - - - - -

(பொருநர் ஆற்றுப்படை, சோழன் கரிகாற் பெரு வளத்தானே முடத்தாமக் கண்ணியார் பாடியது. முடத் தர்மக் கண்ணியார் பெண் புலவர் என்று தோன்றுகிறது.1

பொருநர் ஆற்றப்படையின் பின் மூன்று வெண்பாக்

கள் உள்ளன. அவ்ை வருமாறு: - - - - எரியும் ஏற்றத்தி னுைம் பிறர்நாட்டு வாரி சுரக்கும் வளனெல்லாம் தேரின் அரிகாலின் கீழ்உகூஉம் அந்நெல்லே சாலும், கரிகாலன் காவிரிசூழ் நாடு.