பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருகர் ஆற்றுப்படை விளக்கம்

இருசீர்ப் பாணிக்கு ஏற்ப விரீகதிர் வெள்ளி முளைத்த கள் இருள் விடியல் . ஒன்றியான் பெட்டா அளவையின் ஒன்றிய

கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்பக் கூறிக்

கண்ணில் காண கண்ணுவழி இரீஇப் பருகு வன்ன அருகா நோக்கமொடு உருகு பவைபோல் என்பு குளிர்கொளிஇ 'சரும் பேனும் இருந்து இறை கூடி

வேரொடு கனிந்து வேற்றிழை நுழைந்த

துன்னற் சிதாஅர் துவரக்கி . - - நோக்குதுமை கல்லா நுண்மைய பூக்கனிந்து, அரவுரி அன்ன அறுவை நல்கி மழைஎன மருளும் மகிழ்செய் மாடத்து, இழைஅணி வனப்பின் இன்ககை மகளிர்

போக்கில் பொலங்கலம் கிறையப் பல்கால் வாக்குபு தரத்த வருத்தம் விட ஆர உண்டு பேரளுர் போக்கிச் செருக்கோடு நின்ற காலை, மற்றவன். திருக்கிளர் கோயில் ஒருசிறைத் தங்கித்

தவம்செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது அதன்பயம் எய்திய அளவை மான ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி அனந்தர் நடுக்கம் அல்லதி யாவதும் மனங்கவல்பு இன்றி மாழாந்து எழுந்து

§ 9

75

80

95.