பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறகு, கண்களை மீண்டும் பூதமானவர் மூடிக் கொள்ள, புதையலைத் தேடி வந்தவர்களில் மிஞ்சிய வர்கள் நடக்கவேண்டும். அடுத்து அவர் கண், விழித்துப் பார்க்கும்பொழுது, சிலையாக நிற்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். தவறியவர்கள் ஆடும் வாய்ப்பிலிருந்து தள்ளப்படுகின்றார்கள். இப்படியே விளையாட்டு தொடரும்.

இறுதியாக தவறிழைக்காமல் யார் மிஞ்சுகிறார்களோ அல்லது யார் முதலில் பூதத்தைச் சுற்றியுள்ள பொருட்களில் ஒன்றை எடுத்து விடுகிருரோ, அவரே வெற்றி பெற்றவராவார். -

குறிப்பு:- 1. க ண் மூ டி ப் படுத்திருப்பவர், மற்றவர்கள் நடந்து முன்னேற கொஞ்சம் நேரம் கொடுத்து, பிறகு விழித்துப் பார்க்கவேண்டும்,

2. நடப்பவர்கள் தங்களது காலடி சத்தம் கூட கேட்காதவாறு பூனை போல அடி எடுத்து வைத்துச் சென்றால், அந்தக் காட்சி அருமையான தாக அமையும்.

3. வெற்றியை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதை ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே தீர்மானித்து, ஆட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்குக் கூறினால், அவர்களும் ஆர்வமுடன் பங்குபெற அது வாய்ப்பாக அமையும்.