பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

குறிப்பு: 1. இந்த ஆட்டத்திற்கு, எல்லோருக்கும் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்திருந்தால் நல்லது என்பது மிகமிக முக்கியம்.

2. குழந்தைகள் என்றால் எல்லோரையும் ஒரே சமயத்தில் விளையாடச் செய்யலாம். பெரியவர்கள் என்றால், ஆண்கள் வேறு. பெண்கள் வேறு என்று பிரிந்து நின்று ஆடவிடுவதுதான் நல்லது. தொட்டால் பரவாயில்லை என்றால், சேர்ந்தே ஆடலாம். பரவாயில்லை.

3. துப்பறிபவர் ஆளை அடையாளங் கண்டு பிடிக்க, உடலைத் தடவியும், முகத்தைப் பிடித்தும் தலையைத் துழாவியும் செய்கின்ற செயல்கள் எல்லாம் வேடிக்கையாகவும், சில சமயங்களில் கிச்சு கிச்சு மூட்டுவது போலவும் அமையும். அப்படி ஆளாகின்ற நேரத்தில், முயன்ற வரை சிரிப்பை அடக்கிக் கொள்ள வேண்டும். சிரித்து விட்டால், துப்பறிபவரின் வேலை எளிதாகப் போய்விடும்.

4. இதற்குத் தேவை ஒரு பெரிய கைக்குட்டை அல்லது சிறு துண்டு.