பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




8. எறிபிடி பந்தாட்டம்


விளையாட விரும்புகின்ற அனைவரையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். விரும்பி வந்திருப்பவர்களின் மொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கொண்டு, சமமான எண்ணிக்கையில் இருப்பது போல, இரண்டு குழுவினராகப் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின், ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பெயரைத் தந்து கொள்ளலாம். அப்பொழுதுதான் அவர்களை அழைப்பதற்கு வசதியாக இருக்கும்.

பிறகு, 5 அல்லது 10 அடி விட்டம் உள்ள ஒரு வட்டம் போட வேண்டும். அதன்பின், அந்த வட்டத்திலிருந்து 10 அடி தூரத்திற்கு அப்பால் இதைப் போலவே இன்னெரு பெரிய வட்டம் ஒன்றையும் போட வேண்டும்.

முதல் குழுவினரை உள்வட்டத்தின் கோட்டைச் சுற்றி பரவலாக நிற்க வைக்க வேண்டும். இரண்டாவது குழுவினர் வெளிப்புறம் போடப்பட்டி