பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

குறிப்பு: 1. நடுவில் பந்துடன் நிற்பவர், பந்தை யாருக்கு எறியப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது என்பதால், “தனக்குத்தான் வரப் போகிறது’ என்ற நம்பிக்கையுடன் வட்டத்தைச் சுற்றிலும் நிற்கும் அத்தனை ஆட்டக்காரரும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் தயாராக நின்று கொண்டிருக்க வேண்டும்.

2. பந்தை பிறருக்கு எறியும் போது, அவர் எளிதாகப் பிடித்திடும் வகையில்தான் எறிய வேண்டும். அப்பொழுதுதான் பந்தைப் பிடித்த ஆட்டக்காரர் தொடர்ந்து எறியவும், ஒடிடவும் வசதியாகவும் வாய்ப்பாகவும் இருக்கும்.

3. வட்டத்தைச் சுற்றி என்றால், வட்டமாக நிற்கும் ஆட்டக்காரர்களைச் சுற்றி என்பதுதான் அர்த்தம். வட்டத்தில் நின்று முதலில் ஒடத் தொடங்குகிறவர் ஒ டு கி ன் ற பக்கமாகத்தான், துரத்திக் கொண்டு ஓடுபவரும் ஒடவேண்டும். குறுக்கு வழியாக ஒடிப் பிடிக்க முயலக்கூடாது. -

4. பங்கு பெறுபவர்களின் திறமைக்கும் ஆட்ட அனுபவத்திற்கும் ஏற்ப, வட்டத்தின் சுற்றளவை விரிவுபடுத்தி, ஆடி மகிழலாம். :