பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



15. நாம் இருவர்

விளையாட்டில் ஆட இருக்கின்றவர்களை முதலில் இருவர் இருவராகப் பிரிக்கவேண்டும். ஆண்களாக இருந்தால் நல்லது. பெண்களும் அதில் இருந்தால், பெண்களுக்குள்ளே இருவரை (Partner)ப் பிரித்து வைப்பது நல்லது.

யாருக்கு யார் இணை என்று முதலில் தெரிவித்த பின்னர், அவரவரை அறிமுகப்படுத்தி வைத்து விட வேண்டும்.

பின்னர் அனைவரின் கண்களையும் ஒவ்வொரு. கர்சீப்பால் கட்டி மறைத்துவிட வேண்டும்

பிறகு, சத்தமில்லாமல், ஒவ்வொருவரையும் அங்குமிங்கும் நடக்கச் செய்து, தாங்கள் எங்கே நிற்கின்ருேம் என்பதை தடுமாற்றத்துடன் உணரச் செய்வது போல செய்து விடவும் வேண்டும்

சிறிது நேரம் கழித்து, உங்கள் தோழரை அல்லது உங்கள் தோழியைக் கண்டு பிடியுங்கள் என்று சக்தம் போட்டு அறிவித்து விடவேண்டும்.