பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

 இருவர் முதலில் தாங்கள் பார்ட்டினரைக் கண்டு பிடித்து ஒன்று சேர்ந்து, நாங்கள் இருவரும் கண்டு பிடித்து விட்டிோம்’ என்று முதன் முதலாக அறிவிக்கின்ற குழுவே வென்றதாக அறிவிக்கப்படும்.

குறிப்பு : 1. பங்கு பெறுபவர் அனைவரும் ஒருவருக்கொருவர் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், பெயர்களைச் சொல்லி விட்டாலே போதும். அறிமுகம் தேவையில்லை.

2. அப்பொழுது தான் அறிமுகம் ஆகின்றார்கள் என்றால், அவர்கள் பெயர்களேக் குறிப்பிட்டு அறிவித்த பின்னர், ஒரிரு நிமிடங்கள் அவர்களைக் கலந்துரையாடச் செய்யலாம்.

3. கண்களை துணியால் மறைத்துக் கட்டும் பொழுது, உண்மையிலேயே பார்வையை மறைப்பது போல கட்டிக் கொள்ள வேண்டும். அல்லது கட்டி விட வேண்டும். இதில் ஏமாற்று வேலே இருக்கக் கூடாது.

4. எல்லோரும் தங்களது கண்கள் மறைக்கப் பட்டிருக்கும் பொழுது,கைகளை முன்புறமாக நீட்டித் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், எதிரே யாராவது தென்பட்டால், அவர்களே வேண்டுமென்றே கட்டிப் பிடித்துத் கொள்வதோ அல்லது எட்டிப் பிடித்துக் தள்ளுவதோ தவறு. இந்த சம்யத்தில் மிகவும் பெருந்தன்மையுள்ளவர்களாக எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும்.