பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. தீ ஓட்டம்


ஆட்டம் தொடங்குவதற்கு முன்:

இருக்கின்ற ஆட்டக்காரர்களை நான்கு குழுவாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழுவும் சம எண்ணிக்கை அளவிலே இருக்க வேண்டும்.

நேராகக் கோடு கிழித்து, ஒவ்வொரு குழுவிற்கும் இடையில் 3 அடி இடைவெளி இருப்பதுபோல, வரிசையாக நிறுத்திவிட வேண்டும். அந்தந்தக் குழுவிற்கு எதிரே 30 அடி துரத்தில் ஒவ்வொரு மெழுகு வர்த்தியை வைத்து விட்டிருக்க வேண்டும்.

இப்பொழுது ஒவ்வொரு குழுவின் முன்னால் நிற்கும் ஒவ்வொருவரிடமும் (நான்கு குழுக்களிலும்) ஒரு மெழுகுவர்த்தி, ஒரு தீப்பெட்டிக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்.