பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்டக்காரர்கள் நிற்கும் முறை


ஒவ்வொரு குழுவிலும் முதலில் நிற்கும் உயரமானவர் கால்களை இயல்பான இடைவெளியில். உறுதியாக வைத்து, உடலின் மேற்பகுதியை சற்று முன்புறமாக வளைத்துக் குனிந்து யானை தும்பிக்கைப் போல கைகளை கீழ்புறமாக தொங்கவிட்டுக் கொண்டிருக்க வேண்டும். அவருக்கு அடுத்து நிற்பவர் முன்னால் நிற்பவருடைய இடுப்பை கைகளால் கோர்த்துக் கட்டிக் கொண்டு குனிந்து நிற்கும் அவர் முதுகின் மீது தன் முகம் படுமாறு வைக்க வேண்டும். பிறகு அடுத்தடுத்து நிற்பவர்கள் இரண்டாமவர் செய்தது . போலவே செய்து கொண்டு நிற்கவேண்டும். இப்பொழுது ஒவ்வொரு குழுவையும் ஒரு போர்வையால் மேற்புறமாக மூடிவிட்டால், யானை ஒன்று நிற்பது போல் இருக்கும். ஒவ்வொரு குழுவிலுமுள்ள சிறுவனை அல்லது உயரம் குறைந்த ஒருவனை மத்தியிலே ஒருவன் மேலே உட்காரவைத்தால், யானை மேலே ஒரு யானைப்பாகன் உட்கார்ந்திருப்பதுபோலத் தோன்ற, இப்போது ஆட்டம் ஆரம்பிக்கிறது.

ஆடும் முறை

ஆட்டம் நடத்துபவரின் விசில் ஒலிக்குப் பிறகு ஆட்டம் ஆரம்பமாகிறது விசில் ஒலித்த பிறகு ஒவ்வொரு குழுவும் எல்லையைநோக்கி ஓடவேண்டும். முதலில் எல்லைக்கோட்டை அடைகின்ற குழுவே. வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்படும்.