பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6



உழைப்பு மட்டும் வாழ்க்கையல்ல, ஓய்வும் மிக மிக அவசியமே. ஓய்வு என்றால் படுத்து உறங்குவதல்ல. செய்கின்ற வேலையை மாற்றிச் செய்வது தான் ஓய்வாகும்.

ஓய்வு நேரத்தை, விருப்பமானவர்களுடன் சேர்ந்து, உறவாடி மகிழ்வதும், விளையாடிக் களிப்பதும் சிறந்த பொழுது போக்கு எனலாம்.

விருந்து நாட்களில், அல்லது விழாக் காலங்களில், அல்லது கற்றுலா செல்கின்ற சமயங்களில், பலர் சேர்ந்து இருக்கின்ற நேரத்தில் மகிழ்ச்சியாக பொழுது போக்குவது எப்படி என்ற வினா எழும்புவதும், அதற்கேற்ற விடை கிடைக்காமல் மயங்குவதும் இயல்புதான்.

அந்தக் கேள்விக்கு விடையாக இந்த நூல் எழுதப் பட்டிருக்கிறது.

முப்பது நாற்பது பேர்கள் இருக்கின்ற சமயத்தில், மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் பொழுதினைப் போக்கி, உற்சாகம் அடைகின்ற விதத்தில், 21 சிறு விளையாட்டுக்கள் இங்கே விளக்கப்பட்டிருக்கின்றன.

தேவையான கருவிகளோ சாமான்களோ அதிகம் இல்லாமல், அதிகம் பேர் கலந்து கொண்டு ஆடி மகிழும் வண்ணம், இந்த விளையாட்டுக்கள் இருக்கின்றன.

இருக்கின்ற இடத்திற்கேற்ப, இருக்கின்ற ஆட்களுக்கேற்ப, கிடைக்கின்ற பொருள்களுக்கேற்ப, அமைகின்ற,