பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் சிறைவாசம் 93.

வேண்டுகோளுக்கு இணங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வேன் ‘ என்று ஆகஸ்ட் ஆரும் தேதியே கூறிஞர். அப்படிக் கடிதம் எழுதுமாறு விட்டிருந்தால் காந்தி யடிகள் சத்யாக்கிரஹம் நடத்தாமல் இருப்பதற்கு வேண் டிய முயற்சிகள் செய்திருப்பார். ஒருவேளை சத்தியாக்ர ஹம் ஆரம்பித்தாலும் சர்க்காருக்கு இடைஞ்சல் கொடுக்க விரும்பாததால் சாத்வீகத்திலும் சாத்வீகமான முறையில் நடத்தியிருப்பார்.

ஆகவே சட்டமறுப்பு ஆரம்பிக்கவும் இல்லை, ஆரம் பிக்கத் தேதி குறிப்பிடவுமில்லை, அதைத் தவிர்க்கும் பொருட்டு வைஸ்ராய்க்கு கடிதம் எழுதவே எண்ணி யிருந்தார். ஆனல் சர்க்கார் அதற்கு இடங்கொடாமல் தீர்மானம் நிறைவேறிய மறுநாள் சூரியன் உதிக்கு முன்பே கைதி செய்துவிட்டார்கள்.

இந்த அவசரமேன்? ஒருவேளை கடிதம் எழுதுவ தாகக் கூறிக்கொண்டே ரகஸ்யமான ஏற்பாடுகள் செய்து விடுவார்கள் என்று எண்ணி அவசரப்பட்டு விட்டார் களோ? ஆளுல் காந்தியடிகளிடம் ரகஸ்யமாகக் காரியஞ் செய்தல் என்பது ஒருகாளும் கிடையாதே. எது செய் தாலும் பகிரங்கமாகச் சொல்லிச் செய்வதுதானே அவ ருடைய வழக்கம். அஹிம்சா தர்மம் ரகஸ்யம் என்பதை அணுவளவும் சம்மதியாதல்லவா? அஹிம்சா தர்மம் தானே காந்தி அடிகளின் உயிர்காடி ?

அப்படியால்ை சர்க்கார் அவசரப்பட்டதற்குக் காரணம் யாது? மஹாத்மா காந்தியடிகள் கைதியான ஐந்தாவது நாள் வைஸ்ராய்க்கு எழுதிய கடிதத்தில் “ நாங்கள் சத்யாக்ரகம் நடத்தும் விஷயத்தில் மித மிஞ்சிய ஜாக்ரதையும் காலதாமதமும் செய்வதைக் கண்டு உலகத்தார், சர்க்கார் சுதந்தரம் தராமலிருப்பதற்குக் கூறும் காரணங்கள் சாரமற்றவை என்று கண்டு