பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I28 பொழுது புலர்ந்தது.

- -

தாரியாயிற்றே, எப்படி உங்கள் கையில் அதிகாரத்தைக் கொடுப்பது, இந்து முஸ்லிம்கள் சண்டையிட்டு நாட்டைப் பாழ்படுத்தி விடமாட்டார்களா என்று சர்க்கார் கேட்கிறார்களே. ஆனல் அவர்கள் இந்தியா வின் கேஷமத்தைக் காப்பது இது தானே? ஆறு மாத காலத்தில் ஆறு கோடிப் பேர் உள்ள இடத்தில் 35 லட்சம் பேர் உயிர் துறந்ததும், பாக்கிப் பேர் நோயால் வாடி வந்ததும் காட்டைப் பாழ்படுத்தியது ஆகாதோ?

பிரிட்டிஷ் சர்க்கார் நம் நாட்டின் கூேடிமத்தில் அக்கரை காட்டும் விநோதத்தைப் பாருங்கள். 1943 நவம்பர் மாதம் காமன்ஸ் சபையில் இந்தியாவில் சென்ற 150 வருஷ காலத்தில் ஏற்பட்டிராத அவ்வளவு கடுமை யான பஞ்சத்தைக் குறித்து விவாதம் கடந்தது. ஐரோப் பாவில் சுண்டைக்காய் போல சிறிதாயுள்ள காடுகள் விஷயத்தில் கூட கச்சை கட்டிக் கொண்டு அக்கரை காட்டப் புறப்படும் சர்ச்சில் துரைமகளுருக்கு அந்த விவாதம் நடந்த சமயம் பிரஸ்ன்னமா யிருக்கத் திருவுள மாகவில்லை. அது மட்டுமா, வானுலகில் இருந்து ஆண்ட வன் கவனித்து வருவது போல அவனுடைய பிரதிநிதி யாக 6000 மைலுக்கு அப்பாலிருந்து கவனித்து வரும் பார்லிமெண்டில் 600 மெம்பர்களுக்கு அதிகமுண்டு. ஆனல் நமது பஞ்ச விவாத சமயம் 50 பேர் கூட ஆஜரா யிருக்கவில்லை. அதல்ை தான் டாக்டர் ஜயக்கர் ‘ எங்கள் விஷயம் கவனிப்பதாக இந்தக் கோமாளி வேஷம் எதற்காக?’ என்று கேட்டார்.

இந்த விதமாக நமது யஜமானர்கள் நம்முடைய விஷயத்தில் ஏனே தானே என்றிருக்கிறார்களே, அடிமை தேசங்களுக்கெல்லாம் சுதந்திரம் வழங்கப் போவதாகக் கூறி அட்லாண்டிக் சாஸனத்தை வெளியிட்ட அமரிக்க