பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பொழுது புலர்ந்தது

கொடுத்து நாட்டில் தனிப்பெரும் அரசியல் ஸ்தாபனமாக ஆக்கினர். அதன்பின், காங்கிரஸ் மகா சபையானது

பரிபூரண சுதந்திரமே லட்சியம், அஹிம்சையே சாதனம்

என்று உலகம் முழுவதும் அறியும்படியாகப் பறை சாற் றியது. i. o

1935ம் வருஷம் பிரிட்டிஷ் சர்க்கார் மாகாண சுயாட்சி தருவதாகச் சொல்லி ஒரு அரசியல் சட்டம் இயற்றினர் கள். காங்கிரஸ் மகாசபை அதை ஏற்று கடத்துவதா வேண்டாமா என்று ஆலோசித்தது. நம்முடைய அடிமைத் தளையை அதிகமாக இறுக்குவதற்காக ஆங்கிலேயர் செய் யும் சூழ்ச்சியோ என்று சிலர் சந்தேகப்பட்டார்கள். அப் பொழுது காந்தியடிகள் சங்கிலியை இறுக்கும் சுத்தியலைக் கொண்டே சங்கிலியை உடைத்தெரியவும் செய்யலாம் அல்லவா? என்று கூறினர். அதன்மேல் காங்கிரஸ் கமிட்டியார் பதவி ஏற்பதென்று தீர்மானித்தார்கள். ஆளுல் கவர்னர்களுக்கு விசேஷ அதிகாரம் இருக்கிறதே என் செய்வது என்று தயங்கினர்கள். அப்பொழுது ராஜாஜி முன்வந்து கவர்னர்களின் கச்சுப் பற்களுக்குக் கவசமிட்டு விஷம் கக்காதவாறு செய்தார். கவர்னர்கள் தினசரி நடவடிக்கைகளில் குறுக்கிடுவதில்லை என்று வாக்களித்தார்கள். அதன்மேல் மூன்று மாகாணங்கள் தவிர எட்டு மாகாணங்களில் மந்திரிசபை அமைத்து இங்கிலீஷ் விரோதிகள் கூடப் புகழும்படி வெகு திறமை யாக ஜனங்களுக்குப் பல நன்மைகளைச் செய்து வந்தது.