பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பொழுது புலர்ந்தது

- -

ஆனல் காரியக் கமிட்டியாரை விடுதலே செய்தால் தானே ஆகஸ்டுத் தீர்மானத்தை புனராலோசனை செய்ய முடியும்?

அட்டுழியங்கள் செய்யும்படி காங்கிரஸ் சொல்லா திருக்க அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்வது எப்படி? அவர்கள்தான் பொறுப்பாளிகள் என்றால் அதைப் பாரபகடிமற்ற கோர்ட்டில் நிரூபிக்கத் தயங்குவானேன்?

ஆனல் சர்க்கார் சிக்கலைத் தீர்க்க விரும்பினால் தானே இந்த இரண்டு நியாயமான காரியங்களும் செய்வார்கள் ? ஆயினும் சர்க்காரின் நியாயமற்ற பிடிவாதத்தால் எவ்விதமான நன்மையும் உண்டாகவில்லை என்று கூற (LPL)-ll/ITJJ.

தேசிய சர்க்காரின்றி எவ்வித விமோசனமும் கிடையாது என்பதும், அதற்குக் காங்கிரஸ்தான் வழி காட்ட முடியும் என்பதும், அதல்ை உடனடியாகக் காரியக் கமிட்டியாரை விடுதலை செய்ய வேண்டியது அவவியம் என்பதும், உலகத்திலுள்ள சகல ககதியா ருடைய மனத்திலும் உறுதியாகப் பதிந்துவிட்டன. இது ஒரு மகத்தான நன்மை அல்லவா?

112 பத்திரிகாசிரியர்கள் தங்கள் ககதிகளும் அபிப் பிராயங்களும் வேறு வேருக இருந்தாலும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து வைசிராய்க்கு வேண்டுகோள் அனுப்பினர்கள்.

அதைவிட முக்கியமானது சென்னை சட்டசபை எதிர்க் ககதித்தலைவர்-காங்கிரஸ் சபையை எப்பொழு தும் தாக்கி வரும் ஜஸ்டிஸ் ககதியின் பிரதமர் குமார ராஜா முத்தையா செட்டியார் இந்திய வியாபார சங்க பெடரேஷன் கூட்டத்தில் தலைமை வகித்துச் செய்த பிரசங்கமாகும்.