பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகஸ்டு தீர்மானம் 87

ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினர். இந்தவிதமாக வந்தவர்களில் ஆயிரக் கணக்கானவர் வழியிலேயே மரணம் அடைந்தார்கள். உயிர் தப்பி வந்தவர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிவந்தபடியால் ஏழை களாய்த் தவித்தார்கள்.

அத்துடன் விலைவாசிகள் நாளுக்கு நாள் அதிகமாக விஷம்போல் ஏற ஆரம்பித்து விட்டன. சர்க்கார் உணவுப் பிரச்னே விஷயத்தில் சரியான கவனம் செலுத் தவுமில்லை. கவனம் செலுத்தக் கூடிய ஜனநாயக சர்க் காரை ஏற்படுத்தவுமில்லை.

கிரிப்ஸ் வந்துபோனதில் இந்திய மக்கள் ஏமாற்றமே அடைந்தார்கள். இந்தச் சமயத்தில்கூட இங்கிலிஷ்காரர் அசையமாட்டோம் என்கிறார்களே, இவர்கள் தேசத்தைக் காப்பாற்றும் விஷயங்கூட சந்தேகத்திலிருக்கிறதே என்ற எண்ணம் ஜனங்களிடையே உதிக்கலாயிற்று. இப் பொழுதுபோல எந்தக் காலத்திலும் இந்தியர் இவ்வளவு வெறுப்பு இங்கிலாந்திடம் காட்டியதில்லை என்று லின் லித்கோ பிரபு லூயி பிஷர் என்ற அமரிக்க அறிஞ. ரிடம் கூறியதுதான் அப்பொழுதுள்ள கிலேமை.

இப்படி அரசியல், உணவு, போர் மூன்று விஷயத் திலும் ஜனங்கள் பரம அதிருப்தி அடைந்துள்ள நிலைமை யில் யார்தான் சும்மா கைகட்டிக்கொண் டிருக்க முடியும்? கைகட்டிப் பார்த்துக்கொண்டு கில்லுங்கள் என்று சர்க் கார் கூறிலுைம் ஜனங்களுக்கு உண்டாயிருந்த கஷ்டத் தையும் பயத்தையும் காண காந்தி அடிகளுக்குப் பொறுக்க முடியாமல் ஆய்விட்டது. அதனுல் அவர் வேதனே சகிக்க முடியாமல், “இந்தியாவை விட்டுப் போங்க ளேன்” என்று கூறலானர். ஆனல் சர்க்கார் அவருடைய பரமதயவான வேண்டுகோளைக் கவனித்து வேண்டுவன செய்யாமல் அதற்குப் பதிலாக இதோ பாருங்கள், இந்த