பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிம்பிசாரர் ⚫ 121

பசியாறுவதற்கு அவைகளுக்கு எவ்வளவு ஆசை யிருந்தது! அவைகளுக்குள்ளே பெரிய ஆடுகள் குட்டி களை அழைத்துச் செல்லும் அன்புக்கு ஓர் அவதியில்லாதிருந்தது.

ஆட்டு மந்தைக்குப் பின்னால் ஒரு பெண் ஆடு ஒரு குட்டியுடன் மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது. அதனுடைய மற்றொரு குட்டி கால் நொண்டியாயிருந்த தால் வெய்யிலில் நடக்க முடியாமல் தள்ளாடி வந்து கொண்டிருந்தது. தாய் ஆடு அதை விட்டுப் பிரிய மனமின்றித் தயங்கித் தயங்கித் திரும்பிப் பார்த்துக்கொண்டே யிருந்தது. கருணையின் நிலையமாகிய கௌதமர் அந்தக் காட்சியைக் கண்டதும், ஓடிச் சென்று நொண்டிக் குட்டியைப் பரிவோடு தூக்கித் தமது தோளிலே வைத்துக் கொண்டார். ‘நானும் வேள்வி காண வருகிறேன்!’ என்று கூறி, அவரும் ஆயர்களோடு தலை நகருக்குப் புறப்பட்டார்.

யாகம் தடுத்தல்

‘மனேந்தும் ஈச(ன்) உளம் நாண, ஆட்டின்
மறியேந்து பெருங்கருணைப் புனித வள்ளல்’

மாலை நேரத்திலே மாநகரின் திருவாயிலை அடைநதார். கருணையே உருவெடுத்துக் கால், கரங்களோடு நடப்பது போல் விளங்கிய அருளரசைக் கண்ட மக்கள், அவர் முகப் பொலிவையும், தவக் கோலத்தையும் கண்டு சொக்கிப் போய்விட்டனர். வீதிகளிலே பெண்டுகள் வீடுகளைத் திறந்து போட்டுவிட்டு, அவர் பேரெழிலைக் கண்களால் முகந்து பருகிக்கொண்டு, மெய்மறந்து நின்றனர். நகரின் சந்தடியே அடங்கி, நாலு பக்கங்களிலிருந்தும் ஜனங்கள் கூட்டங் கூட்டமாக வந்து ஆடு

போ -8