பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிம்பிசாரர் ⚫ 123


வீழும் உடலை எழுப்புதலோ—ஒரு
வேந்தன் நினைக்கினும் ஆகாதையா!

‘பிள்ளையைக் கொன்று கறிசமைத்தீர்—அதன்
பெற்றோரை உண்ண அழைத்துநின்றீர் ;
வள்ளலே, உள்ளந் தெளிந்தவரே—இது
வாழ்வை யளிக்கும் செயலாமோ?

‘கன்று பசுவை மறந்திடினும்–செய்த
கருமங்கள் உம்மை விடுமோ, ஐயா?
கொன்று பழிதேட வேண்டாமையா–இனிக்
கொல்லா விரதமேற் கொள்ளுமையா!’


இவ்வாறு கருணை வள்ளல் உயிர்க்கொலை தவிர்த்து, உள்ளத்தால் ஊனமில் வேள்வியை நடத்தி வரும்படி மன்னர்க்கும் மறையோர்க்கும் பலவாறு உபதேசித்தார். ‘யாகங்களால் மன்னர்க்குப் பெருமை என்றும், மறையோர்க்குப் புண்ணியம் என்றும், பலியிடப் பெறும் உயிர்களுக்குச் சொர்க்கம் என்றும் கூறுவர். பலியிடும் உயிர் உடனே சுவர்க்கம் செல்வதானால், ஒருவன் முதலில் தன் தந்தையையே பலியிட்டுச் சுவர்க்கத்திற்கு அனுப்பிவிடலாமே! அவரைவிடச் சிறந்த உயிர்தான் வேறு ஏது? ஆதலால் உயிர்ப்பலி வேண்டாம்! அவசியமானால், என்னையே பலியிடுங்கள்–ஏழை ஆட்டின் உயிரை வாங்க வேண்டாம்!’ என்று அவர் முரசு முழங்கியதுபோல் முழக்கம் செய்தார்.

அருகே வந்து பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்த மகத மன்னர், களங்கமற்ற மூர்த்தியைக் கண்குளிரக் கண்டு வணங்கி, செய்த பிழையைப் பொறுத்தருளும்படி வேண்டினார் ‘இனி நாடெங்கும் கொலை தவிர்க்கும் படி நாளையே பறையறைவிப்பேன்!’ என்று சபதமும்