பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 ⚫ போதி மாதவன்

கௌதமர் பதில் கூறினார்: ‘முதன் முதலில் எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது இவைகள் எனக்குக் கஷ்டமாகத் தோன்றவில்லை. பழகப் பழக எல்லாம் சரியாகப் போய்விடும். ஒரு பிக்கு வினுடைய மாசற்ற உடையிலிருந்து மேலாடைக்கும் மனிதனுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். களங்கமற்ற மனம் இருந்தால் போதும். புசிக்கும் உணவில் என்ன இருக்கிறது? மாசற்றமனமே மனிதருக்கு இருக்கவேண்டும். தேன் மிகவும் தித்திப்பாய்த்தான் இருக்கிறது. ஆனால் அது கொலையினாலும் களவினாலும் சேர்க்கப்பட்ட வஸ்துவானதால், இனிப்பாயிருந்து என்ன பயன்? அதை விட ஆற்றில் ஓடும் பரிசுத்தமான தண்ணீரே அதிக இனிப்பு வாய்ந்ததென்று கருத வேண்டும். ஏனெனில் அத்தண்ணீர் கள்ளத்தனமாகச் சம்பாதிக்கப்பட்ட வஸ்துவல்ல.’[1]

மீண்டும் பிம்பிசாரர் தொடர்ந்து பேசினார். ‘செங்கோல் பிடிக்க வேண்டிய தங்கள் கரம் பிச்சையெடுக்க ஏற்றதன்று. அண்டினோர்க்கு அபயமளிக்க வேண்டிய கையில் திருவோட்டை ஏந்துவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

‘தந்தை ஆளும் இராஜ்யத்தைத் தாம் ஆள விரும்புதல் கூடாது என்று தாங்கள் அன்பினாலே அகற்றி விட்டு வந்திருந்தால், இங்கே என் இராஜ்யம் இருக்கின்றது. இதில் பாதியை நீங்கள் ஆளலாம். நல்லாரின் இணக்கம் நன்மையானது என்பதால், எனக்கும் என் நாட்டுக்கும் நலமே விளையும். இப்போதே என் கடமையை நிறை-


  1. பழைய நீதிக்கதைகள்- பாகம் 1 - திரு. ஏ எஸ். பஞ்சாபகேச ஐயர், ஐ ஸி.எஸ்.