பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டாம் இயல்

ஆறு ஆண்டுகளின் அருந்தவம்

‘ஓடிஓடி ஓடிஓடி
உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி
நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி
மாண்டுபோன மானிடர்
கோடிகோடி கோடிகோடி
எண்ணிறந்த கோடியே!’

–பட்டினத்தார்

வைசுவந்தரத் தவப் பள்ளியிலே கெளதமர் பெருந் தவ முனிவரான ஆலார காலாமரையும், பிறகு உருத்திர கரையும்[1] கண்டு, அவர்களிடம் உபதேசம் பெற்றார். அக்காலத்தில் இவ்விரு வேதியர்களுமே ஞானத்திலும் தவத்திலும் பெரும் புகழ் பெற்றிருந்தனர். கௌதமர் இவர்களைச் சந்தித்த விவரங்கள் ‘மஜ்ஜிம நிகாயம்- மகா சச்சக சூத்திர'த்திலும் ‘அரிய பரியேசன சூத்திர'த்திலும் குறிக்கப் பெற்றிருக்கின்றன.

ஆலார காலாமர்

ஆலார காலாமரும், அவருடைய சீடர்களும் கௌதமரை நன்கு வரவேற்றனர். காலாமர் தாம் அறிந்திருந்த


  1. இவருடைய தந்தையின் பெயர் இராமர் என்பதால், இவரை உருத்திரக ராமபுத்திரர் என்று கூறுவதுண்டு; பாலியில் உத்தக ராம புத்தா என்பர்.