பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 ⚫ போதி மாதவன்

மேற்கொண்டு, பிச்சையெடுத்து உண்டு வந்தால், உண்மையான விடுதலையை அடையலாம். ஆசைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு, சடப் பொருள் உண்மை யன்று என்பதைத் தெளிவாக அறிந்தால், கூண்டிலிருந்து தப்பும் பறவையைப் போல, அகங்காரம் தன் தளைகளிலிருந்து விடுதலை அடையும். இதுவே உண்மை முக்தி ; ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களே இதைக் கற்று அறிந்து கொள்ள முடியும்.’

கௌதமருக்கு இந்தப் போதனையில் திருப்தி ஏற்பட வில்லை. 'நான் என்னும் அகங்காரத்தை அகற்றாததாலேயே மக்கள் பந்தங்களிலே சிக்கியிருக்கின்றனர்’ என்று மறுத்துக் கூற ஆரம்பித்தார் :

‘ஒரு பொருளையும் அதன் குணத்தையும் நாம் நம் கருத்திலே பிரித்துப் பார்க்க முடிகிறது. ஆனால், பிரத்தி யட்சத்தில் அவ்வாறில்லை. நம் கருத்தில் நெருப்பிலிருந்து வெப்பத்தைப் பிரித்துக் காணலாம். ஆனால், நடைமுறையில் வெப்பத்தை நெருப்பிலிருந்து வேறு படுத்த முடியாது. தாங்கள் குணங்களைப் பிரித்து விட்டுப் பொருளைத் தனியே விட்டு விடலாம் என்று கூறுகிறீர்கள். இந்தத் தத்துவத்தை முடிவு வரை ஆராய்ந்து பார்த்தால், உண்மை அப்படியில்லை என்பதைக் காணலாம்.

‘மனிதன் பல ஸ்கந்தங்களின் சேர்க்கை அல்லலா? நம் முனிவர்கள் கூறுவதுபோல நாம் பல ஸ்கந்தங்களின் சேர்க்கையாகவே இருக்கிறோம் அல்லவா? தூல உருவம், புலனுணர்ச்சி, சிந்தனை, சுபாவங்கள், அறிவு ஆகியவற்றின் தொகுதியாகவே மனிதன் விளங்குகிறான். ‘நான் இருக்கிறேன்’ என்று சொல்லும்போது மனிதரால் குறிக்கப்பெறும் அகங்காரம் ஸ்கந்தங்களுக்கு அப்பாம் பட்ட ஒரு தனிப் பொருளன்று; ஸ்கந்தங்களின் கூட்டுறவி-