பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு ஆண்டுகளின் அருந்தவம் ⚫ 135

னாலேயே அந்த அகங்காரம் தோன்றுகிறது. மனம் இருக்கின்றது; உணர்ச்சியும் சிந்தனையும் இருக்கின்றன; உண்மையும் இருக்கின்றது; அறவழியில் செல்லும் மனமே உண்மையானது மானிடனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டுத் தனியான ஆன்மா என்னும் அகம் இல்லை. அகங்காரம் தனிப்பட்ட ஆன்மா என்று நம்புவோன் பொருள் களின் தன்மையைத் தெளிவாக உணர்ந்தவன் ஆகான். ‘ஆன்மாவைத் தேடிக் கொண்டு அலைவதே தவறு; ஆரம்பமே தவறாயிருப்பதால், வழியும் தவறாகவே முடியும்.’[1]

‘அகத்தில் நாம் கொள்ளும் ஆசையாலும், “நான் பெரியவன்", “வியக்கத்தகுந்த இச்செயலை நான் புரிந்தேன்” என்று நாம் கருதும் செருக்கினாலும் சிந்தனை யிலே எவ்வளவு குழப்பம் ஏற்பட்டுள்ளது? “நான்“ என்ற சிந்தனை நம் பகுத்தறிவு இயற்கைக்கும் உண்மைக்கும் நடுவிலே நிற்கின்றது, அதை கழித்துவிட்டால் பொருள் களின் உண்மை நிலை புலனாகும். சரியான முறையில் சிந்திப்பவன் அறியாமையை நீக்கி, ஞானத்தை அடைவான். “நான் இருக்கிறேன்", “நான் இருப்பேன்", “நான் இருக்க மாட்டேன்” என்ற எண்ணங்கள் தெளிவான சிந்தனையாளனுக்கு ஏற்படுவதில்லை.

மேலும், அகங்காரம் நிலைத்திருக்கும் என்றால், உண்மையான விடுதலையைப் பெறுவது எங்ஙனம்? கவர்க்கம், மத்தியம், பாதாளம் ஆகிய மூவுலகங்களில் எங்கேனும் அகங்காரம் புனர்ஜன்மம் எடுக்கும் என்றால், திரும்பத் திரும்பப் பிறப்பும் வாழ்க்கையுமாகவே இருக்கும். அகங்காரமும், பாவமுமாகிய சுழலிலேயே நாம் சிக்குண்டிருப்போம்.


  1. ‘மகா வக்கம்.’