பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 ⚫ போதி மாதவன்

என்று எனக்குள்ளே கூறிக் கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டேன்.”[1]

அங்கே அமர்ந்து கொண்டு சாக்கிய முனிவர்: மக்களின் துக்கத்தையும், வானவில்லைப் போல் பல வண்ணங்களுடன் பொய்மையாக விளங்கும் வாழ்க்கை யையும் பற்றிச் சிந்தனை செய்து நியம நிஷ்டைகளுடன் தனிலே தவம் புரிந்து வந்தார். அப்போது அவரைப் போல மெய்யறிவில் நாட்டம் கொண்ட ஐந்து தாபதர்கள் அங்கு வந்து அவரோடு சேர்ந்துகொண்டனர். அவர் களிமே தீர்க்கமான அறிவுள்ள கௌண்டிந்ய குலபுத்திரர் முதன்மையானவர்; தசபால காசியபர், பாஷ்பர், அசுவஜித், பத்திரகர் என்போர் மற்ற நால்வர் அந்த ஐவரோடும் சேர்ந்து கொண்டு; கௌதமர் படிப்படியாகக் கடுமையான தவ முறைகளை மேற்கொள்ளலானார்.

அம்முறைகளில் சிலவற்றைப் பற்றிப் பிற்காலத்தில் சாரீபுத்திரர் என்ற தமது பிரதம சீடர் ஒருவருக்குக் கூறிய விவரத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

தவத்திலே அவர் தம்மோடிருந்த அனைவருக்கும் முன்னணியிலே இருந்தார். கரடு முரடான வாழ்க்கையையே அவர் மேற்கொண்டார். நியமங்களில் அவர் தவறியதேயில்லை. உடைகளே இல்லாமல் அவர் பல நாட்கள் இருந்தார். ‘அடிகளே, வாருங்கள்!’ என்று அழைத்த இடங்களுக்கும் போவதில்லை. தமக்கென்று கொண்டு வந்து அளித்த உணவைப் புசிப்பதில்லை. வாயிற் படியில் வைத்து அளிக்கும் உணவையும், சாளரங்களின் வழியே நீட்டிய உணவையும் அவர் ஏற்பதில்லை. உணவிலும் எத்தனையோ கட்டுப்பாடுகளை அமைத்துக் கொண்டார். சில சமயங்களில் ஒரே வீட்டில் மட்டும்


  1. ‘மஜ்ஜிம நிகாயம்-அரியபரியேசன சூத்திரம்’