பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 ⚫ போதி மாதவன்


‘இடர் வரும்போதும்–உள்ளம்
இரங்கிடும் போதும்,
உடன் பிறந்தவர்போல்–மாந்தர்
உறவு கொள்வரப்பா!

‘ஓடும் உதிரத்தில்–வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும்–சாதி
தெரிவதுண்டோ, அப்பா !

‘நெற்றியில் நீறும்–மார்பில்
நீண்ட பூணூலும்
பெற்றிவ் வுலகுதனில்–எவரும்
பிறந்ததுண்டோ அப்பா ?

‘பிறப்பினால் எவர்க்கும்–உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில்–நல்ல
செய்கை வேண்டுமப்பா!’

பின்னர் ஆயன் மனமுவந்து அளித்த பாலைப் பருகிப் பகவர் தளர்ச்சி நீங்கினார்.

கடுந்தவ முறைகள்

உடைகள் விஷயத்தில், கௌதமர் கிடைத்தவைகளை யெல்லாம் உடுத்த ஆரம்பித்தார் சணல் முதலிய வற்றால் நெய்த உடைகளையும், பிணங்கள் மீது போர்த்திய துணிகளையும் குப்பை மேடுகளில் கண்டெடுத்த துணிகளையும், மரவுரிகளையும், கிழிந்த மான் தோல்களையும், புற்களையும், தலை ரோமம், குதிரை மயிர், ஆந்தையின் இறகுகள் முதலியவற்றால் செய்த உடைகளையும் வெவ்வேறு காலங்களில் அவர் அணிந்து வந்தார்.

அவர் தலை ரோமங்களையும் தாடி ரோமங்களையும் கையாலேயே முளையோடு பறித்தெடுத்து விடுவது