பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 ⚫ போதி மாதவன்


‘காணுதற் கரிய கடவுள் யானலன்;
மண்ணிற பிறந்த ஓர் மனிதனே, அம்மா!
ஆதியில் உலகாள் அரசிளங் குமரன் ;
இந்நாள்,
வையக மாந்தர் மன இருள் போக்கும்
உண்மை ஞான ஒளியினைத் தேடி
ஆறாண் டாக, அல்லும் பகலும்
அலைந்து திரியும் ஆண்டியும் ஆவேன் !
... ... ... ...
ஒப்பிலாச் சுத்த உணவாம் இதனை
உண்டு தெளிந்த உடலைக் கண்டபின்
உண்மையை அறிவதும் உறுதி யாம் எனச்
சிந்தையில் நன்கு தெரிந்து கொண்டனன் !”

பிறகு அவர் அம்மங்கையின் வாழ்க்கை வரலாற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். கோடி கோடியான இந்தியப் பெண்களைப் போலவே, தானம், தருமம் முதலியவற்றில் நம்பிக்கை கொண்டு, கொழுநனையே தெய்வமாக வணங்கி, தூய சிந்தனையுடன் வாழ்க்கையின் துயரங்களை மறந்து, நன்மை செய்தார்க்கு நன்மையே விளையும் என்ற நம்பிக்கையுடன் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் கதையைக் கேட்ட கௌதமர்,


‘அறிவிற் பெரிய ஆசிரி யர்க்கும்
அறிவு புகட்டும் நல் அறிவுடை யவள் நீ !’

என்று பாராட்டிப் புகழ்ந்தார். அவளைப் போன்ற மெல்லிய மலர்கள் நிழலிலேயே பூத்து மலர வேண்டும் என்றும், சத்தியத்தின் பேரொளி அவளைப் போன்ற இளந்தளிர்களை வாடச் செய்துவிடும் என்றும் அவர் எண்ணினார். ‘உன் எண்ணம் நிறைவேறியது போலவே, விரைவிலே நானும் என் சித்தியை அடைவேன் என்ற