பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போதி மாதவன் ⚫ 171

மொழிகளைக் கேட்பார்களா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.[1]

‘மகா உன்னதமான உண்மையை நான் உணர்ந்திருக்கிறேன். அது உள்ளத்தை உருக்குவதாயும் சாந்தியளிப்பதாயும் உள்ளது. ஆனால் தெரிந்து கொள்ளக் கடினமானது. ஏனெனில் பெரும்பாலான மக்கள் உலகியல் விஷயங்களிலேயே ஈடுபட்டு அவைகளிலேயே இன்பம் காண்கின்றனர்.

‘உலகப் பற்றுள்ளவன் எனது தருமத்தை உணர்ந்து கொள்ளமாட்டான். ஏனெனில் “நான்” என்னும் அகங்காரத்திலேயே அவனுக்கு இன்பம் இருக்கிறது. சத்தியத்தோடு முற்றிலும் அடிபணிந்து சரணடைவதிலுள்ள இன்பத்தை அவன் உணர முடியாது.

‘போதி பெற்றவர் பேரின்பம் என்று கூறுவதை, அவன் துறவு என்பான். நிறைவு பெற்ற பெரியோர் நித்திய வாழ்வு என்று கண்டதை, அவன் அழிவு என்பான்; தம்மையே வென்று கொண்டு அகங்காரத்தை அகற்றிய


  1. பிற்காலத்துச் சீன அறிஞர் 'சுவாங்த்ஸு' என்பவர் பொது மக்கள் சம்பந்தமாக இதுபோன்ற கருத்தைக் கூறியுள்ளார்: ‘பேருண்மைகள் பொதுமக்களின் மனத்தைக் கவர்வதில்லை. இப்போது உலகம் முழுவதும் தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு உண்மையான பாதை தெரிந்திருந்தும், நான் எப்படி வழி காட்ட முடியும்? நான் வெற்றியடைய முடியாது என்று தெரிந்திருந்தும், வெற்றியடையப் பிடிவாதம் செய்தால் அதுவும் தவறாகும். ஆதலால் நான் தலையிடாமல் பேசாதிருத்தலே சரி. ஆனால் நான் முயற்சி செய்யவில்லையானால், வேறு யார் முயற்சி செய்யப் போகின்றனர்?’