பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180 ⚫ போதி மாதவன்

களுக்கே பொருத்தமானது. மற்றொரு வழி (உடலைத் துன்புறுத்திக் கொள்ளும்) கடுமையான நோன்புகளை மேற்கொள்ளும் வழி–இதுவும் வழக்கமாயிருந்து வருகிறது; இதுவும் வேதனை தருவது; பயனற்றது.

‘ஓ பிக்குக்களே! ததாகதரால் கைவிடப்பட்ட அமிதமான . இரண்டு வழிகளையும் நீக்கி, கண்களைத் திறந்து (உண்மையை ) உணரச் செய்து, மனச் சாந்தியையும், பேரறிவையும், பூரணமான மெய்ஞ்ஞானத்தையும், நிர்வாண முக்தியையும் அடைவதற்கு அழைத்துச் செல்லும் அந்த மத்திய வழி எது? அதுவே உயர்ந்த அஷ்டாங்க மார்க்கமாகும். அதாவது:

நற்காட்சி–(ஸம்மாதிட்டி)

நல்லூற்றம்–(ஸம்மாஸங்கல்ப)

நல்வாய்மை–(ஸம்மா வாசா)

நற்செய்கை–(ஸம்மா கம்மந்த)

நல்வாழ்க்கை–(ஸம்மா ஜீவ)

நல்லூக்கம்–(ஸம்மா வாயாம)

நற்கடைப்பிடி–(ஸம்மா ஸதி)

நல்லமைதி–(ஸம்மா ஸம்மதி)

‘ஓ பிக்குக்களே! ததாகதரால் னகவிடப்பட்ட அமுதமான இரண்டு வழிகளையும் நீக்கிக் கண்களைத் திறந்து, (உண்மையை) உணரச் செய்து, மனச்சாந்தியையும், பேரறிவையும், பூரணமான மெய்ஞ்ஞானத்தையும், நிர்வாண முக்தியையும் அடைவதற்கு அழைத்துச் செல்லும் அந்த மத்திய வழி இதுவேயாகும்!’