பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 193

அது தாழ்ந்திருந்தாலும், உயர்ந்திருந்தாலும். அது அருகிலிருந்தாலும், தொலைவிலிருந்தாலும் அதை முறையாகவும் சரியாகவும் உணர்ந்து கொண்டவன் “இந்த உடலெல்லாம் என்னுடையதன்று, இது நான் அன்று, ஆன்மா என்னுடையது அன்று!” என்று கருத வேண்டும்’

[இதைப் போலவே உணர்வு, புலனறிவு, ஸ்கந்தங்கள், பிரக்ஞை முதலியவையும் “நான் அன்று” என்று கருத வேண்டும்.]

‘பிக்குக்களே! இவ்வாறு கண்டு கொண்டு கற்றறிந்த கண்யமுள்ள சீடன் உடலிடத்தும், உணர்விடத்தும், புலனறிவிடத்தும், ஸ்கந்தங்களிடத்தும், பிரக்ஞையிடத்தும் அருவருப்படைகிறான். அருவருப்படைந்து அவன் காமம் முதலிய உணர்ச்சிகளைக் கடக்கிறான். உணர்ச்சிகளைக் கடந்து செல்வதால் அவன் விடுதலை யடைகிறான்; விடுதலையடைந்தவனிடம் அவ் விடுதலை பற்றிய அறிவு தோன்றுகிறது. அவன் தனக்கு மறுபிறப்பு இல்லை என்பதையும், தான் தரும முறைப்படி வாழ்ந்தாயிற்று என்பதையும், செய்ய வேண்டியதைச் செய்தாயிற்று என்பதையும், (தனக்கு) இந்த உலகுக்கு அப்பால் (இனி) எதுவும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளுகிறான்.[1]


  1. ‘அனந்த லக்கண சூத்திரம்’ அல்லது பஞ்ச சூத்திரம்’. ஆன்மா இல்லை என்று புத்தர் கூறுவதில், சாதாரணமாக உலகியல் முறையில் ‘உயிர்’ என்றும் ‘ஆன்மா’ என்றும் கூறுவதை அவர் மறுக்கவில்லை; ஆனால் உடலுக்குள்ளே, உடலோடு ஒட்டாமல், கண்ணினால் காண்-