பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196 ⚫ போதி மாதவன்

கடமை என்றும், உடல் நலம் இல்லாமல் ஞானச்சுடரை ஏற்ற முடியாது என்றும் அவர் எடுத்துக் காட்டினார்.

ஆனால் புலன்களின் போக்குப்படி இன்பங்களைத் துய்த்தல் உடலுக்கும் உள்ளத்திற்கும் சோர்வு உண்டாக்கும் என்றும், அப்படி வாழ்பவன் தன் உணர்ச்சிகளின் அடிமை என்றும், இன்ப வேட்டையாடிக் கொண்டிருத்தல் மனிதனை இழிநிலைக்குத் தள்ளிப் பாமரனாக்கிவிடும் என்றும் எளிய முறையிலேயே அவர் தமது தருமத்தை உபதேசித்து வந்தார்

அந்நிலையில், தமது தருமம் நிலைத்து நிற்பதற்கும், எங்கும் பரவுதற்கும், தம் சீடர்கள் தனித்தனியாகப் பிரிந்து முயன்று கொண்டிருப்பதைவிட ஒன்றுசேர்ந்து சங்கமாக ஐக்கியப்படவேண்டும் என்றும் அவர் கருதினார். அதன்படி முதலில் சேர்ந்த ஐந்து சீடர் களையும் சங்கமாகக் கூடச் செய்தார். அப்போது அவர் கூறியவதாவது:

‘சத்திய மார்க்கத்திலே செல்லத் தீர்மானிக்கும் ஒரு மனிதன் தனித்து நின்றால், அவன் வலிமை குன்றித தன் பழைய பழக்கங்களுக்கே திரும்பிவிடக்கூடும் ஆதலால் நீங்கள் ஒன்று சேர்ந்து இருங்கள். ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் முயற்சிகளை மற்றவர்கள் பலப்படுத்துங்கள்.

‘சகோதரர்களைப் போலிருங்கள்; அன்பில் ஒன்றாகவும், துறவறத்தில் ஒன்றாகவும், சத்தியத்தை நாடும் ஆர்வத்தில் ஒன்றாகவும் இருங்கள்.

‘உலகின் திசைகளிளெல்லாம் சத்தியத்தையும் தருமத்தையும் பரப்புங்கள்; முடிவில் சகல ஜீவன்-