பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 199

திருந்த தன் உடலை உற்று நோக்கி வெட்கமடைந்தான். முத்துக்களும், நவரத்தினங்களும் அவனைப் பரிகசித்துக் கொண்டிருந்தன.

அருள் நிறைந்த அண்ணல் அவனுடைய உள்ளக் கிடையை உணர்ந்து பேசினார்; ‘அன்ப! ஒருவன் புறத்திலே நகைகள் அணிந்திருந்தாலும், அவன் மனம் புலன்களை வெற்றி கொண்டிருக்க முடியும். வெளித்தோற்றம் தரும வாழ்க்கை அன்று, அது உள்ளத்தைத் தீண்டாது. சிரமணன் சீவர ஆடையைப் புனைந்து கொண்டே, உலகப் பற்றுக்களில் ஆழ்ந்திருக்கவும் முடியும்.

‘ஏகாந்தமான வனங்களிலே தங்கியிருந்தும் ஒருவன் வையகத்தின் ஆடம்பரங்களை விரும்பினால், அவன் உலகப் பற்றில் ஆழ்ந்தவனாவான்; உககத்தாரைப் போல உடைகள் அணிந்த ஒருவன், தன் இதயத்தை வான மண்டலத்திலே பறக்கவிட்டு, உன்னதமான சிந்தனைகளை மேற்கொள்ளவும் கூடும்.

‘துறவியும் இல்வாழ்வோனும் “நான்” என்ற அகங்காரத்தை அகற்றிவிட்டால், இருவர்க்குள்ளும் பேதமேயில்லை.

‘பகைவனை வென்று வீரத்தை நிலைநிறுத்திய போர் வீரன் வீரச்சின்னங்களை அணிவான்– அதே போலத் துறவி துக்கம் என்ற பகைவனை வீழ்த்தித் துவராடை என்னும் வீரச்சின்னத்தை அணிவான்!’


‘மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து
பிறர்க்(கு) அறம் அருளும் பெரியோன் ....’

கூறிய அறிவுரைகள் யசனுடைய உள்ளத்தை உருக்கி விட்டன. ஊசி காந்தத்திடம் அணுகல்போல, அவன் பகலரிடம் ஐக்கியமாகித் திளைத்துப் பெருகும் இன்பத்-